ஜனவரி 14, செய்யாறு (Tiruvannamalai News): திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செய்யாறு, மேநல்லூர் கிராமத்தில் வசித்து வருபவர் பிரேமா. இவரின் இரண்டாவது மகள் சுமித்ரா (வயது 10). சம்பவத்தன்று பிரேமா, சுமித்ரா, பிரேமாவின் உறவினர் மகளான மற்றொரு சிறுமி ஆகியோர், குளத்திற்குச் சென்றனர். அங்கு துணி துவைத்துக்கொண்டு இருந்ததாக தெரியவருகிறது. Avaniyapuram Jallikattu 2025: சீறிப்பாயும் காளைகள்., சிதறவிடும் காளையர்கள்.. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு இன்று.! நேரலை இங்கே.!
சிறுமி குளத்தில் மூழ்கி மரணம்:
அப்போது, சிறுமி சுமித்ரா திடீரென குளத்தின் ஆழத்திற்கு சென்று சிக்கிக்கொண்டதாக தெரியவருகிறது. இதனால் நீரில் மூழ்கிய சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர், விரைந்து சென்று சிறுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.