Trichy College Student Drowned Death (Photo Credit: YouTube)

ஏப்ரல் 21, சமயபுரம் (Trichy News): திருச்சி மாவட்டத்தில் உள்ள சமயபுரம், சுங்கச்சாவடி பகுதியில் தனியார் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த வெங்கடேஷ், லட்சுமி அரவிந்த் என்ற இரண்டு மாணவர்கள் பயின்று வருகிறார்கள். நேற்று விடுமுறை தினம் என்பதால், இவர்கள் அனைவரும் சுங்கச்சாவடியை அடுத்துள்ள விவசாய நிலத்தின் கிணற்றுக்குச் சென்று குளிக்க முடிவு செய்துள்ளனர். புதுமணத்தம்பதிக்கு புளூ டிரம் பரிசு.. மணமக்களை ஷாக்கில் ஆழ்த்திய மணமகன் தோழர்கள்..! 

நீரில் மூழ்கி பலியான சோகம்:

நண்பர்கள் 8 க்கும் மேற்பட்டோர் புறப்பட்டு கிணற்றுக்குச் சென்று குளித்துக்கொண்டு இருந்தனர். அப்போது, வெங்கடேஷ் எதிர்பாராத விதமாக ஆழமான பகுதிக்கு சென்று தத்தளித்தார். அவரை காப்பாற்ற முயன்ற மாணவர் லட்சுமி அரவிந்தும் நீரில் மூழ்கி தத்தளித்தார். நீச்சல் தெரியாமல் இருவரும் தத்தளிக்க, இவர்களின் அபயக்குரல் கேட்டு அந்த மக்கள் தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலை அறிந்ததும் விரைந்து வந்த அதிகாரிகள் இருவரின் உடலையும் மீட்டனர். இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.