Rowdy Suresh | Crime File Pic (Photo Credit: @Narenkumar_Ravi X / Pixabay)

செப்டம்பர் 23, ஸ்ரீரங்கம் (Trichy News): திருச்சி மாவட்டத்திலுள்ள ஸ்ரீரங்கம், அடையவளஞ்சான் பகுதியில் வசித்து வருபவர் சந்துரு என்ற தலைவெட்டி சந்திரமோகன். இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு ஸ்ரீரங்கம் (Srirangam Rowdy Murder) ரயில்வே மேம்பாலத்தில் சென்றபோது தலை துண்டித்து கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் ஆட்டுக்குட்டி சுரேஷ் என்பவர் கைதாகி தற்போது பிணையில் வெளியே வந்துள்ள நிலையில், அவர் நேற்று தனது மனைவி ராகினியுடன் நவல்பட்டு பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுள்ளார். பின் இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.

பயங்கர ஆயுதங்களால் படுகொலை:

இரவு சுமார் 07:40 மணியளவில் இவர்கள் இருவரும் திருவானைக்காவல், அம்பேத்கர் நகர் சுடுகாடு பகுதியில் வந்தபோது, வேறொரு இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் கும்பல் சுரேஷின் இருசக்கர வாகனத்தில் மோதியுள்ளனர். இதனால் நிலைத்தடுமாறி இருவரும் கீழே விழுந்த நிலையில், சில நொடிகளுக்குள் அங்கு குவிந்த நான்கு பேர் கும்பல், சுரேசை சரமாரியாக அரிவாள் மற்றும் கத்தி உட்பட பயங்கர ஆயுதங்களால் வெட்டிக்கொலை செய்தது. இந்த சம்பவத்தில் மனைவியின் கண்முன்னே சுரேஷ் பரிதாபமாக உயிரிழந்தார். Sibi Chakravarthi IPS: ரௌடி சீசிங் ராஜா என்கவுண்டரில் பலியான விவகாரத்தில் திருப்பம்; தெற்குமண்டல இணை ஆணையர் பரபரப்பு விளக்கம்.! 

இதனைக்கண்டு ராகினி துடிதுடித்துப்போன நிலையில், சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்து வந்த காவல்துறையினர், சுரேஷின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், விசாரணையில் கொலையாளிகள் ஆறு பேரும் காவல் நிலையத்தில் சரணடைந்ததாகவும் தெரிவிக்கப்பட்டது. பழிக்குப்பழியாக நடந்த இந்த கொலை சம்பவம் தற்போது பெரும் அதிர்வலியை ஏற்படுத்தியிருக்கிறது. கடந்த ஓராண்டுக்குள் மட்டும் திருச்சி மாநகரில் 14 கொலைகள் அரங்கேறிய நிலையில், ஸ்ரீரங்கம் பகுதியில் மட்டும் பத்து கொலைகள் நடைபெற்றுள்ளன.