செப்டம்பர் 14, உடுமலை (Tiruppur News): கேரளா மாநிலத்தில் உள்ள திருச்சூர் பகுதியில் வசித்து வருபவர் சுஜித். இவரின் மனைவி அஸ்வதி தம்பதிகளுக்கு திருமணம் முடிந்து கௌதமி என்ற பெண் குழந்தையும், திருகயத் என்ற ஆண் குழந்தையும் இருக்கின்றனர். இவர்கள் நால்வரும் சம்பவத்தன்று திருப்பூர் மாவட்டத்தில் உள்ள உடுமலைப்பேட்டையில் (Udumalaipettai Accident) இருந்து, பழனி நோக்கி காரில் பயணம் செய்தனர். உடுமலையில் (Udumalai) இருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள பாலப்பம்பட்டி தேசிய நெடுஞ்சாலையில் காரில் வேகமாக சென்றுகொண்டு இருந்தனர்.
3 பேர் பரிதாப பலி:
அப்போது, வேகத்தடை மீது கார் ஏறி இறங்கியபோது, எதிர்பாராத விதமாக கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இந்த விபத்தில், இருசக்கர வாகனம் மீது மோதிய கார், தலைகுப்புற கவிழ்ந்தது. மேலும், பேருந்து நிறுத்தத்தில், பேருந்துக்காக காத்திருந்தவரின் மீதும் கார் மோதி விபத்தில் சிக்கியது. கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த விபத்தில், பேருந்துக்காக காத்திருந்த கோயம்புத்தூர் மாவட்டம், மதுக்கரை பகுதியை சேர்ந்த ரங்கசாமி (வயது 68), என்பவர் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். Cuddalore News: ரூ.10 க்கு விற்பனை செய்யப்பட்ட குளிர்பானத்தால் நடந்த சோகம்; கடலூரில் துயரம்.. சிறுவனின் தாய் பரிதவிப்பு.!
3 பேர் படுகாயம்:
இருசக்கர வாகனத்தில் வந்த புதுக்கோட்டை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (வயது 52), அவருடன் பயணித்த ராஜகோபால் (வயது 50) ஆகியோர் படுகாயத்துடன் உடுமலை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டனர். அங்கு இருவரும் அடுத்தடுத்து சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், உடுமலை விஜி ராவ் நகரில் வசித்து வரும் சதாசிவம் (75), காரில் பயணம் செய்த அஸ்வதி (25), கௌதமி (9) ஆகியோர் படுகாயமடைந்து இருந்தனர்.
காவல்துறை விசாரணை:
இவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்யப்பட்டுள்ளனர். இந்த விஷயம் குறித்து உடுமலைப்பேட்டை காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் காரணமாக அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.