ஜூலை 07, வேலூர் (Vellore News): வேலூர் மாவட்டத்தின் ஈடிகை தோப்பு பகுதியில் வசித்து வருபவர் வெங்கடேசன். இவர் கட்டிட மேஸ்திரியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணம் முடிந்து மனைவி மற்றும் 15 வயதில் தனசேகரன் என்ற மகன் இருக்கிறார். தனசேகரன் கணியம்பாடியில் உள்ள அரசு பள்ளியில் 9 ஆம் வகுப்பு பயின்று வந்துள்ளார். சிறுவனுக்கு வரும் ஜூலை 10 ஆம் தேதி பிறந்தநாள் என்பதால் பெற்றோரிடம் புதிய ஆடை வாங்கவும், நண்பர்களுக்கு சாக்லேட் வாங்கவும் ரூ.1000 கேட்டதாக தெரிய வருகிறது. Gold Rate Today: மக்களே இதுதான் சான்ஸ்.. சரிந்த தங்கம் விலை.. இன்றைய தங்கம், வெள்ளி விலை நிலவரம் இதோ.!
உயிரை மாய்த்த சிறுவன் :
ஆனால் சிறுவனின் தந்தையிடம் பணம் இல்லாத காரணத்தால், தற்போது தன்னிடம் பணம் இல்லை என்றும், பணம் வந்த பிறகு தருகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். இதனால் தந்தையிடம் சண்டையிட்ட சிறுவன், பெற்றோரிடம் பேசாமல் மன உளைச்சலில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு தூங்குவதற்காக தனது அறைக்கு சென்ற சிறுவன் மின்விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
போலீசார் விசாரணை :
இதனையடுத்து காலையில் மகனின் அறைக்கு சென்று பார்த்தபோது மகன் தூக்கில் தொங்கிய நிலையில் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக அவரை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். மருத்துவரின் பரிசோதனையில் சிறுவன் உயிரிழந்தது தெரிய வந்துள்ளது. பின் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மாணவனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.