ஆகஸ்ட் 13, இராசபாளையம் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் உள்ள இராஜபாளையம் (Rajapalayam), அய்யனார் கோவில் செல்லும் வழியில் முடங்கியாறு இருக்கிறது. முடங்கியாற்று பாலத்தில் இன்று காலை தலை ஒன்று துண்டிக்கப்பட்ட நிலையில் வைக்கப்பட்டு இருந்தது. இதனைக்கண்டு அதிர்ச்சியடைந்த பொதுமக்கள், இராஜை நகர வடக்கு காவல் நிலைய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளனர். Coimbatore College Bus Accident: அதிவேகத்தில் பயணம்.. லாரி மீது தனியார் கல்லூரி பேருந்து மோதி பயங்கரம்; 15 மாணாக்கர்கள் படுகாயம்.!
தனியார் நிறுவன காவலாளி:
இதனையடுத்து, நிகழ்விடத்திற்கு விரைந்த அதிகாரிகள் பாலத்தின் மீது வைக்கப்பட்டு இருந்த முகத்தை மீட்டனர். மேலும், இந்த நபர் யார்? எதற்காக? யாரால்? கொலை செய்யப்பட்டார்? என விசாரணை நடந்து வந்தது. விசாரணையில், கொலை செய்யப்பட்டது சுந்தர்ராஜபுரம் பகுதியியை சேர்ந்த காவலாளி பூவையா என்பது உறுதியானது. பூவையா தனியார் நிறுவனத்தில் காவலாளியாக பணியாற்றி வந்த நிலையில், அவருடன் பணியாற்றி வந்த சக ஊழியரால் கொலை செய்யப்பட்டது அம்பலமானது.
முன்விரோதத்தில் பயங்கரம்:
இதனையடுத்து, பூவையாவுடன் பணியாற்றி வந்த காவலாளி பாலமுருகனை கைது செய்த அதிகாரிகள், அவர் கொடுத்த வாக்குமூலத்தின் பேரில் புதைக்கப்பட்ட உடலை தேடி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் முன்விரோதத்தில் கொலை நடந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதால், முழுமையான விசாரணைக்கு பின்னரே உரிய காரணம் தெரியவரும் என அதிகாரிகள் கூறுகின்றனர். கொலை சம்பவம் நடந்ததும் தனிப்படை அமைத்து உடனடியாக விசாரணையும் தீவிரப்படுத்தப்பட்டது.