Lecoanet Hemant (Photo Credit @backiya28 X)

நவம்பர் 08, சென்னை (Chennai News): இந்தோ-பிரெஞ்சு பிராண்டான ஜீன்ஸ் லெகோனெட் ஹேமந்த் (Lecoanet Hemant) சென்னையில் தனது புதிய கிளையை தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது. இதுதொடர்பாக இந்தோ-பிரெஞ்சு பிராண்டான ஜீன்ஸ் லெகோனெட் ஹேமந்த் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், சென்னையில் உள்ள எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நவம்பர்10ம் தேதி மாலை 6 மணி அளவில் புதிய கிளையை தொடங்கிறோம். சென்னையை போன்று புதுமைகளை விரும்பும் கடற்கரை சமூகத்தை கொண்ட நகரத்தில் எங்களது கிளையை விரிவுபடுத்துவதில் பெருமை கொள்வதாகவும், இதில் பாரிஸ் மற்றும் இந்திய கைவினைத்திறனுடன் கூடிய வகையில் ஆடைகள் காட்சிப்படுத்தப்படும் என்று ஜீன்ஸ் லெகோநெட் ஹேமந்தின் இணை நிறுவனர் டிடியர் லெகோனெட் தெரிவித்துள்ளார். Sabarimala Bus Services: ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு.. சபரிமலை செல்ல ஸ்பெஷல் சொகுசு பேருந்துகள்..!

மேலும் பாரிஸ் கலைத்திறன் மற்றும் இந்திய கைவினைத்திறனுடன் கூடிய வகையில் ஆடைகள் வடிவமைக்கப்படும் என்றும், இவை மாடலிங் துறையில் ஆர்வம் உள்ளவர்களுக்கு புதுவிதமான அனுவபத்தை அளிக்கும் என நம்பிக்கை தெரிவித்துள்ளார். இந்நிகழ்ச்சியை பிரியதர்ஷினி விஜய் தொகுத்து வழங்குகிறார். இதில் சென்னை முழுவதிலும் இருந்து ஃபேஷன் ஆர்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இதில் பொதுமக்களும் மாலை 3 மணி முதல் கலந்து கொள்ளலாம்.