Accuse Anbazhagan | Harassment File Pic (Photo Credit: Facebook / Pixabay)

நவம்பர் 15, உளுந்தூர்பேட்டை (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை (Ulunthurpet, Kallakurichi) அருகேயுள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது சிறுமி, உளுந்தூர்பேட்டை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் நர்ஸிங் கல்லூரியில் (Nursing College Girl Student) இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார்.

இவர் தினமும் தனது கல்லூரிக்கு பேருந்தில் சென்று வருவது வழக்கம். இந்நிலையில், சிறுமி தினமும் பேருந்தில் வருவதை நோட்டமிட்ட பு.கொணாலவடி கிராமத்தில் வசித்து வரும் அன்பழகன் என்பவர், சிறுமியிடம் நட்பாக பழகி வந்ததாக தெரியவருகிறது.

அன்பழகன் தனியார் கல்லூரியில் மாணவராக பயின்று வரும் நிலையில், சம்பவத்தன்று தனது தோழியான 17 வயது சிறுமியை தன் வீட்டிற்கு அழைத்துசென்றுள்ளார். நண்பன்தானே (Friendship) என சிறுமியும் நம்பிக்கையாக சென்ற நிலையில், அங்கு கயவன் பாலியல் தொல்லை (Sexual Harassment) கொடுத்துள்ளார்.

பதறிப்போன சிறுமி அங்கிருந்து தப்பி வந்துவிட, வெளியில் அதனை சொல்லவில்லை. அன்பழகன் சிறுமிக்கு தொடர்புகொண்டபோது, அவர் கண்டித்து அழைப்பை துண்டித்துவிட்டார். ICC CWC 2023 Semifinal IND Vs NZ: இன்று மதியம் 2 மணியளவில் தொடங்குகிறது இந்தியா - நியூசிலாந்து அணிகள் ஆட்டம்: இறுதிப்போட்டிக்கு முன்னேறுவது யார்?..! 

இதனிடையே, சிறுமிக்கு 18 வயது கடந்ததும் திருமணம் செய்ய திட்டமிட்டு இருந்த பெற்றோர், அதற்காக வரன் பார்த்து தற்போதே நிச்சயமும் (Engaged Girl) செய்து, கல்லூரி படிப்பு முடிந்ததும் திருமணம் செய்ய தேதி குறித்ததாக கூறப்படுகிறது.

இந்த தகவலை அறிந்த அன்பழகன், சிறுமிக்கு வரன் பாத்திருந்த மணமகனின் செல்போன் நம்பரை பெற்று, அவருக்கு தான் சிறுமியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை ஆபாசமாக சித்தரித்து அனுப்பி வைத்துள்ளார்.

இதனை அறிந்த சிறுமியின் குடும்பத்தினர், உளுந்தூர்பேட்டை (Ulunthurpet Police) காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். புகாரை ஏற்ற காவல் துறையினர், போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அன்பழகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

நண்பன், காதலன் என எளிதில் தனக்கு அறிமுகமான நபரின் கேடான எண்ணங்கள் தெரியாமல் பழகினால், எந்த மாதிரியான விபரீதம் நிகழும் என்பதற்கு ஆகச்சிறந்த உதாரணமாக அமைந்துள்ளது இந்த சம்பவம்.