ஜனவரி 04 , புதுடெல்லி (New Delhi): மத்திய சுற்றுலா, கலாச்சார அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், மக்களவை கூட்டத்தொடரில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் கேள்விக்கு தனது பதிலை அளித்து இருந்தார். அவரின் பதில் வாயிலாக முக்கிய புனித யாத்திரை, பாரம்பரிய சுற்றுலாத்தலங்கள் உட்கட்டமைப்பை மேம்படுத்த மொத்தமாக ரூ.1,594 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. இதன் வாயிலாக காஞ்சிபுரம், வேளாங்கண்ணி ஆகிய நகரங்களின் வளர்ச்சிக்காக, அங்குள்ள சுற்றுலாத்தலங்களை மேம்படுத்த மொத்தமாக ரூ.18.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. E-Sharm: மாதம் ரூ.3,000 நிதியுதவி.. எதிர்கால வாழ்க்கையை பாதுகாக்கும் பிரதமரின் அசத்தல் திட்டம்.. விபரம் உள்ளே.! 

உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக நிதி:

இந்த விஷயம் குறித்து மத்திய அமைச்சர் அளித்த பதில் பின்வறுமாறு., "ஆன்மிகத் தலங்களை புனரமைத்தல் இயக்கத் திட்டத்தின் கீழ் சுற்றுலா அமைச்சகம், முக்கியமான புனித யாத்திரை மற்றும் பாரம்பரிய தலங்களில் சுற்றுலா உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேச நிர்வாகங்களுக்கு நிதி உதவி வழங்குகிறது. 27 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் மொத்தம் 47 திட்டங்களை ரூ.1594.40 கோடி மதிப்பில் மேற்கொள்வதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளன.

காஞ்சிபுரம் & வேளாங்கண்ணிக்கு நிதி ஒதுக்கீடு:

உத்தரப்பிரதேச மாநில அரசிடமிருந்து பெறப்பட்ட தகவல்களின்படி, ராமர் கோயில் கட்டப்பட்ட பிறகு அயோத்திக்கு ஆன்மிக சுற்றுலா கணிசமான அதிகரித்துள்ளது. அயோத்தியின் சுற்றுலா புள்ளிவிவரங்களின்படி, அயோத்தி மாவட்டத்திற்கு வருகை தந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 2020-ம் ஆண்டில் 6,022,618 ஆக இருந்தது, 2024-ம் ஆண்டில் 164,419,522 ஆக அதிகரித்துள்ளது. தமிழ்நாட்டில் 2016-17-ம் ஆண்டில் காஞ்சிபுரம் மேம்பாட்டிற்காக ரூ.13.99 கோடிக்கும் வேளாங்கண்ணி மேம்பாட்டிற்காக ரூ.4.86 கோடிக்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்லவர்களின் காலத்தில் கட்டப்பட்ட காஞ்சிபுரம் கோவில்:

காஞ்சிபுரம் கோவிலின் வீடியோ: