Kanyakumari Women Murder Case Accuse Debu Roy Visual (Source Picture)

மே 02, ஆரல்வாய்மொழி (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள ஆரல்வாய்மொழியில் (Aralvaimozhi, Kanyakumari) பெரிய நாடார் என்பவருக்கு சொந்தமாக செங்கல்சூளை செயல்பட்டு வருகிறது. இந்த சூளையில் மேற்கு வங்கம் மாநிலத்தில் உள்ள பேல்பூர் பகுதியை (West Bengal Worker) சேர்ந்த டெபுராய் (வயது 30) என்பவர் பணியாற்றி வருகிறார். இங்கு கொல்கத்தாவில் (Kolkata) வசித்து வரும் வசந்தி பகாடியா (வயது 29) என்பவரும் கடந்த சில மாதங்களுக்கு முன் வேலையில் புதிதாக இணைந்துள்ளார்.

வசந்திக்கு திருமணம் முடிந்து 7 வயதுடைய மகன் இருக்கும் நிலையில், தற்போது கணவரை பிரிந்து வாழ்ந்து வந்துள்ளார். இதற்கிடையே, டெபுராயுடன் அவர் அடுத்த வாழ்க்கையை தொடங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று இரவு நேரத்தில் டெபுராய் மதுபோதையில் இருந்துள்ளார். அப்போது, வசந்தியிடம் தகராறு செய்துள்ளார். தகராறில் வசந்தியை கையில் கிடைத்த மரக்கட்டையால் தாக்கி, அவரின் மார்பு மற்றும் தொடை போன்ற பகுதிகளை கடித்து குதறியுள்ளார். The Kerala Story: தமிழகத்தில் கேரளா ஸ்டோரீஸ் படத்தை திரையிட வேண்டாம் – உளவுத்துறை தமிழக அரசுக்கு உச்சகட்ட எச்சரிக்கை.!

இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த வசந்தி நிகழ்விடத்திலேயே துடிதுடிக்க பலியாகியுள்ளார். பின்னர் சம்பவம் குறித்து ஆரல்வாய்மொழி காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, அதிகாரிகள் வசிக்காரனை நடத்தி வழக்குப்பதிந்து டெபுராவை கைது செய்தனர். வசந்தியின் உடலும் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. விசாரணையில், வசந்தி மேற்குவங்கம் மாநிலத்தில் இருந்து கஞ்சா எடுத்து வந்து அங்குள்ள சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்து வந்துள்ளார்.

இந்த விஷயத்தில் இருவருக்குள்ளும் பணத்தகராறு இருந்துள்ளது. இதுகுறித்த பிரச்சனை முற்றுகையில் கொலை நடந்துள்ளது அம்பலமானது. விசாரணைக்கு பின்னர் டெபுராய் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்ட்டார். தாயை தேடிய குழந்தையின் அழுகை அங்கிருந்தோரிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.