ஜூலை 25, ஊத்தங்கரை (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஊத்தங்கரை பகுதியை சேர்ந்தவர் சதாசிவம். இவரின் மகள் சக்தி பிரியா (வயது 24). சூலூர் தனியார் பல் மருத்துவக்கல்லூரியில், நான்காம் ஆண்டு மருத்துவம் பயின்று வருகிறார்.
கல்லூரியின் விடுதியில் தங்கியிருந்து மருத்துவம் பயின்று வந்த சக்தி பிரியா, கடந்த 25ம் தேதி விடுதி அறையில் இருந்தபோது தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார்.
இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மாணவி சக்தி பிரியாவின் மரணத்திற்கான காரணம் தொடர்பாக விசாரணை நடத்தி இருக்கின்றனர். பெற்றோரும் மகளின் தற்கொலையில் சந்தேகம் இருப்பதாக புகார் தெரிவித்துள்ளனர்.
இந்த புகாரின் பேரில் அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்து, சக்தி ப்ரியாவின் செல்போனை கைப்பற்றி ஆய்வு செய்துள்ளனர். இதன் வாயிலாக சக்தி பிரியா கிருஷ்ணகிரியில் பொறியியல் கல்லூரியில் பயின்று வரும் மாணவர் கோகுலுடன் (வயது 25) பேசி வந்தது தெரியவந்தது. Pregnant Women Dental Problem: கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு ஏற்படும் பல் வலி; அசத்தல் ஆலோசனைகள் இதோ.!
இதையடுத்து கோகுலிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவர் பேசுகையில், "நான் கிருஷ்ணகிரியில் இருக்கும் பொறியியல் கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வருகிறேன். நான் - சக்தி பிரியா பள்ளியில் இருந்து ஒன்றாக படித்ததால், பின்னாட்களில் காதல் வயப்பட்டோம்.
கடந்த 7 ஆண்டுகளுக்கும் மேலாக இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்தோம். கடந்த சில மாதங்களுக்கு முன்னதாக சக்தி பிரியாவின் நண்பருக்கு பண உதவியை செய்திருந்தார். இதில் எனக்கு விருப்பம் இல்லாததால், சக்தியை எதற்காக பணம் கொடுத்தாய்? என கண்டித்தேன்.
இதில் எங்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, அவர் என்னிடம் பேசியதை குறைந்துகொண்டார். இதனால் ஆத்திரமடைந்த நான் சக்தி பிரியாவின் தோழிகளுக்கு தொடர்பு கொண்டு அவரிடம் பேசாதீர்கள் என கூறினேன்.
இந்த தகவலை அறிந்த சக்தி பிரியா, என்னிடம் சம்பவத்தன்று விடுதியில் இருந்தவாறு போனில் தொடர்புகொண்டு வாக்குவாதம் செய்தார். சண்டைக்கு பின் நான் அழைப்பை துண்டித்துவிட்டேன். அதற்கு பின் நடந்தது தெரியாது" என கூறியுள்ளார். இதனையடுத்து, கோகுலின் மீது சக்தி பிரியாவை தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிந்து கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.