![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/02/Army-Jawan-Prabhakaran-With-his-Wife-Photo-Credit-Facebook-ANI-380x214.jpg)
பிப்ரவரி 16, போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சம்பள்ளி (Pochampalli, Krishnagiri), வேலம்பட்டி கிராமம், எம்.ஜி.ஆர் நகரில் வசித்து வருபவர் சின்னசாமி. இவர் நாகோஜனஹள்ளி பேரூராட்சி (DMK Councillor) முதல் வார்டு கவுன்சிலராக இருக்கிறார். இப்பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 33). இவரின் சகோதரர் பிரபு (வயது 29). இருவரும் இராணுவத்தில் (Army Jawan) பணியாற்றி வருகிறார்கள்.
இவர்களில் பிரபு, பிரபாகரன் விடுமுறையில் சொந்த ஊருக்கு வந்துள்ளனர். அப்போது, கடந்த 8ம் தேதி ஊரில் இருக்கும் சின்டெக்ஸ் தொட்டியில் துணி துவைத்துக்கொண்டு இருந்துள்ளார். இதனை கவனித்த சின்னசாமி என்பவர் கண்டிக்கவே, அவர்களுக்குள் வாய் தகராறு ஏற்பட்டுள்ளது. பின்னர், மாலை நேரத்தில் சின்னசாமி தனது ஆதரவாளர்கள் 10-க்கும் மேற்பட்டோருடன் பிரபாகரனிடம் சென்று தகராறு செய்துள்ளார். Allu Arjun Latest Pic: புஷ்பா 2-வில் மாஸ் சம்பவம்.. அல்லு அர்ஜுனின் அசத்தல் லுக் இதோ.!
#WATCH | "My husband fell down... My husband did not even drink water. We admitted him to a hospital in Kaveripattinam, my husband was serious," wife of Army personnel who was killed allegedly by a DMK councillor in Krishnagiri, Tamil Nadu pic.twitter.com/U7S7AofZYi
— ANI (@ANI) February 16, 2023
ஒருகட்டத்திற்கு மேல் இராணுவ வீரர் பிரபு, பிரபாகரனை தாக்கவே, அவர்கள் அளித்த புகாரின் பேரில் நாகரசம்பட்டி காவல் துறையினர் திமுக கவுன்சிலரின் மகன்கள் ராஜபாண்டி (வயது 30), குரு சூரியமூர்த்தி (வயது 27), குணநிதி (வயது 19), உறவினர் மகன்கள் மணிகண்டன் (வயது 32), மாதையன் (வயது 60), வேடியப்பன் (வயது 55) ஆகிய 6 பேரை கைது செய்தனர்.
இவர்களின் தாக்குதல் சம்பவத்தில் காயமடைந்து இருந்த பிரபாகரன் ஓசூரில் (Hosur) இருக்கும் தனியார் மருத்துவமனையில் (Private Hospital) சிகிச்சைக்காக அனுமதி செய்யப்படவே, தீவிர சிகிச்சையில் இருந்தவர் நேற்று மாலை பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் கவுன்சிலர் சின்னசாமி உட்பட 2 பேரை கூடுதலாக கைது செய்தனர்.
பிரபு மற்றும் பிரபாகரன் பொங்கல் விடுமுறைக்காக (Pongal Celebration) சொந்த ஊருக்கு வந்திருந்த நிலையில், இருவரும் வரும் மாதம் 9ம் தேதி முகாமுக்கு செல்லவிருந்தனர். இதற்கிடையிடையே பிரபாகரனின் மரணம் நடந்துள்ளது. பிரபுவுக்கு மனைவி, குழந்தைகள் இருக்கின்றனர்.