செப்டம்பர் 10, அண்ணா நகர் (Chennai News): சென்னையில் உள்ள அண்ணாநகர், மேல்நடுவங்கரை பஜனை கோவில் தெருவில் வசித்து வருபவர் காளிதாஸ். இவரது மகள் திரிஷா (வயது 20). செங்குன்றம் எடப்பாளையம் பகுதியில் வசித்து வருபவர் ராபின் (வயது 22). முன்னதாக இவர்கள் இருவருக்கும் இடையே ஏற்பட்ட பழக்கமானது காதலாக மலர்ந்ததைத்தொடர்ந்து, இருவரும் உயிருக்கு உயிராக காதலித்து வந்துள்ளனர். இந்நிலையில், நேற்று காலை சுமார் 11 மணியளவில் வேப்பேரி காவல் நிலையம் பின்புறம் இருக்கும் தனியார் லாட்ஜில் இருவரும் அறை எடுத்து தங்கி உள்ளனர். வானிலை: தமிழகத்தில் 31 மாவட்டங்களில் கொட்டித்தீர்க்கும் மழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
காதல் ஜோடி சண்டை:
அப்போது, வாய் தகராறு ஏற்பட்ட நிலையில், விடுதி அறையின் கதவை வெளிப்புறமாக பூட்டிய ராபின் வெளியேறி சென்றுள்ளார். பின் சிறிது நேரம் கழித்து மீண்டும் வந்து பார்த்தபோது, திரிஷா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. காதலன் தன்னை தாக்கி விட்டு வெளியே அறைக்கதவையும் பூட்டிவிட்டதால் இந்த விபரீத முடிவை திரிஷா எடுத்திருக்கலாம் என ராபின் நினைத்துள்ளார். இதனால் பதறிப்போன ராபின், திரிஷாவின் தோழி ஒருவருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறிவிட்டு தானும் தற்கொலை செய்து போவதாக தெரிவித்து விட்டு அழைப்பை துண்டித்துள்ளார்.
அடுத்தடுத்து தற்கொலை:
இதனால் பதறிப்போன திரிஷாவின் தோழி, திரிஷாவின் பெற்றோருக்கு தொடர்பு கொண்டு விஷயத்தை கூறியுள்ளார். அவர்கள் காவல்துறையினர் மற்றும் விடுதி ஊழியர்களுக்கு தொடர்பு கொண்டு தெரிவித்த நிலையில், அனைவரும் சென்று பார்த்தபோது திரிஷா தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. மேலும், ராபின் எங்கே சென்றார்? என விசாரித்து கொண்டிருந்தபோது, அவர் தனது வீட்டுக்கு சென்று தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இருவரின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்த காவல் துறையினர், வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இருவரின் காதலுக்கும் பெற்றோர் பச்சைக்கொடி காண்பித்து 6 மாதத்தில் திருமணம் நடக்கவிருந்த தருணத்தில் சோகம் நடந்துள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3
தற்கொலை தடுப்பு மற்றும் மனநல உதவி எண்கள்:
டெலி மனாஸ் (Tele Manas) சுகாதார அமைச்சகம் - 14416 அல்லது 1800 891 4416; நிம்ஹான்ஸ் (NIMHANS) + 91 80 26995000 / 5100 / 5200 / 5300 / 5400; பீக் மைண்ட் (Peak Mind) - 080 456 87786; வந்த்ரேவாலா அறக்கட்டளை - 9999 666 555; அர்பிதா தற்கொலை தடுப்பு உதவி எண் - 080-23655557; iCALL - 022-25521111 மற்றும் 9152987821; COOJ மனநல அறக்கட்டளை - 0832-2252525, தற்கொலை தடுப்பு மையம் கோயம்புத்தூர் - 0422-2300999, சினேகா தற்கொலை தடுப்பு மையம் சென்னை - +91 44 2464 0060 மற்றும் +91 44 2464 0050..