பிப்ரவரி 16, கோச்சடை: தமிழ்நாட்டில் (Tamilnadu) போதைப்பொருட்கள் (Drugs) கடத்தல் போன்றவற்றை ஒழிக்க, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழ்நாடு காவல்துறை சார்பில் ஆபரேஷன் கஞ்சா (Operation Ganja) திட்டத்தின் கீழ் பல கஞ்சா (Ganja Smugglers) வியாபாரிகள் அதிரடியாக கைது செய்யப்பட்டனர். இதனால் தமிழகத்தில் கஞ்சா விற்பனை என்பது குறைந்து இருந்தது.
இதற்கிடையே, சில மாதங்கள் கடந்ததும் மீண்டும் தங்களின் திருட்டு செயலை கையில் எடுக்க தொடங்கியுள்ள கஞ்சா விற்பனையாளர்கள், திருட்டுத்தனமாக நூதன முறைகளில் தமிழகத்திற்குள் கஞ்சாவை கடத்தி வந்து விற்பனை செய்து வருகின்றனர். இதனை கட்டுப்படுத்த தமிழ்நாடு காவல்துறை தேவையான நடவடிக்கையை எடுத்து வருகிறது.
ரகசிய தகவலின் பேரில் அதிகாரிகள் பல சோதனைகளையும் மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் உள்ள கோச்சடையில் (Kochadai, Madurai) காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அப்போது, அவ்வழியே சரக்குந்து (Lorry) வந்தது.
அதனை இடைமறித்த அதிகாரிகள் சோதனை செய்தபோது, கிட்டத்தட்ட டன் அளவிலான கஞ்சா கடத்தி செல்லப்படுவது அம்பலமானது. அதாவது மொத்தமாக 951 கிலோ கஞ்சா வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்டன. கடந்த சில மாதங்களாக கஞ்சா விற்பனை குறைந்து வந்தாக பலரும் நினைத்திருந்தனர். Mud Came Out Metro Construction: சகதியாக கொப்பளித்த நிலங்கள், தண்ணீர் பைப்புகள்.. பதறிப்போன மக்கள்.. மெட்ரோ இரயில் சேவை பணியில் பகீர்.!
ஆனால், அதிகாரிகள் கைப்பற்றிய அளவு கிட்டத்தட்ட டன் அளவை எட்டியுள்ளது என்பதால் பேரதிர்ச்சி கிடைத்துள்ளது. இவை எங்கிருந்து கடத்தி வரப்பட்டவை?. இதற்கு பின்புலத்தில் இருந்து செயல்படுபவர்கள் யார்? என்ற விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
இந்த விவகாரத்தில் பிரபாகரன் மற்றும் செந்தில் பாபு ஆகியோர் கைது செய்யப்பட்ட நிலையில், காவல் துறையினர் வாகனத்தை நிறுத்தியதும் அங்கிருந்தது தப்பி ஓடிய ஜெயக்குமார் மற்றும் ராம்குமாரை அதிகாரிகள் தேடி வருகின்றனர். இவர்களின் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.