தீப்பற்றி எரிந்த இரயில் பெட்டிகளின் காட்சிகள் (Photo Credit: Twitter)

ஆகஸ்ட் 26, மதுரை (Madurai News): உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள லக்னோவில் இருந்து தென்னிந்தியாவில் உள்ள பல்வேறு திருத்தலங்களுக்கு பக்தர்கள் இரயிலில் வருகை தந்திருந்தனர். இவர்கள் நேற்று நாகர்கோவிலுக்கு சென்றுவிட்டு, மீண்டும் இரயிலின் உதவியுடன் மதுரை வந்தடைந்தனர்.

இவர்கள் பயணித்த இரயிலை இரயில்வே நிர்வாகம் இன்று அதிகாலை, மதுரை இரயில் நிலையத்தில் இருந்து 1 கி.மீ தூரம் முன்பு நிறுத்தி வைத்துள்ளனர். அப்போது, 60 பேர் கொண்ட குழுவாக இருந்த சுற்றுலா பயணிகள், தங்களுக்கு காலை உணவை இரயில் பெட்டியில் வைத்தே சமைத்ததாக தெரியவருகிறது. AI School in Kerala: செயற்கை தொழில்நுட்பத்தை கையில் எடுத்த கேரளபள்ளி: முன்னாள் பிரதமர் துவங்கி வைத்தார்..! 

தீப்பற்றி எரிந்த இரயில் பெட்டிகளின் காட்சிகள் (Photo Credit: Twitter)

தகவல் அறிந்து வந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் துரிதமாக ஈடுபட்டனர். தீயை விரைந்து கட்டுப்படுத்தி, காயமடைந்தோரை மீட்டு அங்குள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர்.

முதற்கட்ட விசாரணையில், இரயில் பெட்டியில் இருந்தபடி சிலிண்டரில் உணவு சமைத்தால், சிலிண்டர் வெடித்து தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இந்த விபத்து ஆன்மீக சுற்றுலா வந்த பலருக்கும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.