மே 10, கும்மிடிப்பூண்டி (Gummidipoondi): திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கும்மிடிப்பூண்டி, பெருவயல் கிராமத்தில் மஹிந்திரா நிறுவனத்திற்கு சொந்தமான 52 ஏக்கர் நிலம் உள்ளது. இந்த நிலத்தில் ஜப்பான் நாட்டை சேர்ந்த எலக்ட்ரிக் கார் தயாரிப்பு நிறுவனமான Mitsubishi Motors நிறுவனம் கார் தயாரிப்பு பணிகளை தொடங்கவுள்ளது.
அடுத்த 5 ஆண்டுகளில் ரூ.18.91 பில்லியன் (231.2 மில்லியன் டாலர்) முதலீடுகளை தமிழகத்திற்கு கொண்டு வருவதன் மூலமாக, சுமார் 2 ஆயிரம் பேருக்கு பணிகள் கிடைக்கும். 2000 பேரில் 60% பணியாளர்கள் பெண்கள் ஆவார்கள். Kuno National Park: இனவிருத்தி சண்டையில் பெண் சிறுத்தையை கொன்ற ஆண் சிறுத்தை?.. தேசிய பூங்காவில் சம்பவம்.!
தற்போது முதற்கட்ட பணிகள் அனைத்தும் நடைபெறும் நிலையில், 2025 ம் ஆண்டு முதல் வாகனங்களை விற்பனைக்கு கொண்டு வரும் வகையில் விறுவிறுப்புடன் தொடக்க பணிகள் நடைபெறுகின்றன என களத்தகவல் தெரிவிக்கின்றன.