Liquor | Crime File Pic (Photo Credit: Pixabay)

பிப்ரவரி 26, திருவள்ளூர் (Tiruvallur News): திருவள்ளூர் மாவட்டம், தொடுகாடு நமச்சிவாயபுரம் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ண மூர்த்தி (வயது 27). இவர், தொழில் செய்வதற்காக தனது தாய் ஜெயந்தியிடம் பணம் வாங்கியுள்ளார். அந்த பணத்தை வைத்து தினமும் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்து, மீண்டும் பணம் கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளார். இதனால், ஆத்திரமடைந்த அவரது தாய் ஜெயந்தி, பெற்ற மகன் மீது பெட்ரோல் ஊற்றி தீ வைத்துள்ளார். Delivery Boy Arrested: பெண் குளிப்பதை ரகசியமாக வீடியோ எடுத்த டெலிவரி ஊழியர்.. பகீர் சம்பவம்..!

பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை:

இதில், படுகாயமடைந்த கிருஷ்ண மூர்த்தி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வந்தார். இதனையடுத்து, அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுதொடர்பாக, காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், மகனை பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை (Murder) செய்த ஜெயந்தியை மப்பேடு காவல்துறையினர் கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.