ஏப்ரல் 05, செய்யாறு (Tiruvanamalai News): திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு, பிரம்மதேசம் பொதுக்கூட்டத்தில் மக்களின் மனம் துன்புறும் வகையில் பேசியதாக, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது கடந்த 2022ம் ஆண்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இந்த விஷயம் குறித்த விசாரணைக்காக செய்யாறு குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் இன்று சீமான் விசாரணைக்காக நேரில் ஆஜரானார். அதனைத்தொடர்ந்து, அங்கிருந்தபடி செய்தியாளர்கள் சந்திப்பும் நடைபெற்றது.
வக்பு விஷயத்தில் மத்திய அரசின் செயல்பாடு நல்லதல்ல:
இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய சீமான், "இவ்வுளவு காலம் இருந்த முறையில், நாட்டுக்கு நடந்த தீமை என்ன? வக்பு இடம் உங்களது இல்லை. இஸ்லாமிய பெருமக்கள் நற்காரியங்கள் செய்ய நன்கொடையாக இடத்தை கொடுத்தனர். இஸ்லாமிய மக்களுக்கு எதிராக சிந்திப்பதை தவிர ஆட்சியாளர்கள் சிந்திப்பது இல்லை. மத, இன, மொழி பெயரில் மக்களின் உணர்வை தூண்டி பிரதமர் நரேந்திர மோடி அரபுநாடுகளுக்கு சென்று இந்து கோவிலை திறந்து வைக்கிறார். பிற நாடுகளில் வழிபாடுகளை அனுமதிக்கின்றனர். இந்தியாவில் வழிபாடு, கல்வி போன்ற அனைத்தும் மக்களின் உரிமை. அரசு இன்று கொடுங்கோன்மையுடன் செயல்படுகிறது. TN Govt Schools: சினிமா பாடலுக்கு நடனமாட தடை.. தமிழக அரசு அதிரடி..!
மக்களின் மனதை வெல்லவேண்டும்:
இது நாட்டின் ஒருமைப்பாட்டுக்கு எதிரானது. நபிகள் நாயகம் கொண்டு வந்த சட்டத்திலேயே பெண்களுக்கு முன்னுரிமை, பாதுகாப்பு இருக்கிறது. இஸ்லாமிய மக்கள் மீது வெறுப்புணர்வை வைத்து அரசியல் செய்கின்றனர். தேர்தல் வரும்போது வாக்கு அரசியலுக்காக அனைத்தும் செய்யப்படுகிறது. வக்பு வாரிய சட்டத்தில் திருத்தும் கொண்டு வந்துவிட்டால் மக்களின் வறுமை ஒழிந்துவிடுமா? மண்ணை வெல்லவேண்டும் என்றால் மக்களின் மனதை வெல்ல வேண்டும். பாஜக கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் விஷயத்தில், அது அவர்களின் கட்சி. அதில் நாம் கருத்து சொல்ல தேவையில்லை.
டாஸ்மாக் விற்பனையை விரும்பும் ஆட்சியாளர்கள்:
கள் போதைப்பொருள் என்றால், மதுபானம் பதப்படுத்தப்பட்ட பழச்சாறா? தீர்த்தமா? கள் என்பது மூலிகைச்சாறு. பணம் பால், தென்னம்பால் என்ற அடிப்படை கூட தெரியாமல் நீங்கள் எப்படி ஆட்சியாளர்களாக உருவாகினீர்கள். 500 கூலி வாங்கும் தொழிலாளி டாஸ்மாக்கில் ரூ.500 ஐயும் இழக்கிறார். கள்ளு கடைகள் திறந்தால் டாஸ்மாக் வியாபாரம் படுத்துவிடும். அதனாலேயே கள்ளு மதுபானம் என கூறப்படுகிறது. அவர்களின் சொந்த வருமானத்துக்காக அவதூறு பரப்புகின்றனர்" என பேசினார்.