Crime File Picture (Photo Credit: Pixabay)

ஜூன் 11, ராசிபுரம் (Namakkal News): நாமக்கல் மாவட்டத்தில் உள்ள ராசிபுரம், முள்ளுக்குறிச்சி காரியாம்பட்டி கிராமம், முருகன்கோவில் தெருவில் வசித்து வருபவர் மாணிக்கம். இவரின் மகன் மோகன்ராஜ் (வயது 33). இவர் தனியார் பேருந்து ஓட்டுநர் ஆவார். மோகன்ராஜின் மனைவி கீர்த்தனா (வயது 30). தம்பதிகளுக்கு ஜனாஸ்ரீ (வயது 13), கவின் ஸ்ரீ (வயது 7) என்ற இரண்டு மகன்கள் இருக்கின்றனர்.

கடந்த 5ம் தேதி இரவில் மோகன்ராஜ் வீட்டின் ஒரு அறையிலும், மனைவி மற்றும் மகள்கள் மற்றொரு அறையிலும் உறங்கி இருக்கின்றனர். காலை நேரத்தில் மோகன்ராஜ் மர்மமே முறையில் உயிரிழந்து கிடைக்க, சம்பவம் குறித்து ஆயில்பட்டி காவல் துறையினர் விசாரணை நடத்தினர். மோகன்ராஜின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விஷயம் தொடர்பாக ராசிபுரம் துணை காவல் கண்காணிப்பாளர் செந்தில்குமார், ஆயில்பட்டி காவல் துறையினர் நடத்திய விசாரணையில், மோகன்ராஜின் மனைவியான கீர்த்தனாவுக்கும், கதிரேசன் (வயது 25) என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறி இருக்கிறது.

இதனால் கள்ளக்காதல் ஜோடி தனிமையில் உல்லாசமாக இருந்து வண்ணத்தை நிலையில், இதனை அறிந்த மோகன்ராஜ் இருவரையும் கண்டித்துள்ளார். இது கள்ளக்காதல் ஜோடிக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, மோகன்ராஜை கொலை செய்ய அவர்கள் திட்டமிட்டுள்ளனர்.

சம்பவத்தன்று மோகன்ராஜ் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்த நிலையில், கதிரேசன் மற்றும் கீர்த்தனா ஆகியோர் மின் கம்பத்தில் இருந்து வயர் உதவியோடு மின்சாரத்தை எடுத்து மோகனின் உடலில் பாய்ச்சி கொலை செய்துள்ளனர். பின்னர், எதுவும் தெரியாதது போல கீர்த்தனா நாடகம் ஆடியுள்ளார். இறுதியில் கள்ளக்காதல் ஜோடியை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்தனர்.