ஜூலை 17, நாமக்கல் (Namakkal News): நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம், குருசாமிபாளையம் பகுதியில் ஸ்ரீ வித்யா மந்திர் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் சுற்றுப்புறத்தைச் சார்ந்த ஏராளமான மாணவ, மாணவிகள் பயின்று வரும் நிலையில் அவர்களை பள்ளிக்கு அழைத்து வர நிர்வாகம் சார்பில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பள்ளி பேருந்தின் ஓட்டுனர் விஜி என்பவர் இன்று காலை மாணவ, மாணவிகளை பள்ளி வேனில் அழைத்து வந்து கொண்டிருந்தார். தரையில் பச்சிளம் குழந்தைகள்.. திமுக அரசு வெட்கப்பட வேண்டும் - நயினார் நாகேந்திரன் கடும் தாக்கு.!
துடிதுடித்து உயிரிழந்த ஓட்டுநர் :
அப்போது பின்னால் வந்த இருசக்கர வாகனத்திற்கு அவர் வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த வாகன ஓட்டிகள் சிலர் பள்ளி பேருந்தை நடுரோட்டில் நிறுத்தி ஓட்டுனரை சரமாரியாக தாக்கியிருக்கின்றனர். இதில் ஓட்டுநரின் உயிர்நாடியில் கடுமையான தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்படும் நிலையில், அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக துடிதுடிக்க உயிரிழந்தார். இந்த விஷயம் குறித்து தகவலறிந்த விஜியின் உறவினர்கள் அவரது உடலை நடுரோட்டில் வைத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போலீசார் அமைதி பேச்சுவார்த்தை :
தகவலறிந்து வந்த புதுச்சத்திரம் காவல்துறையினர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட ஆட்சியர் தலைமையிலான அதிகாரிகள் வேன் ஓட்டுநர் விஜியின் குடும்பத்தினரிடம் அமைதி பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்துள்ளனர். தொடர்ந்து மக்கள் அங்கு சாலையில் குவிந்துள்ளதால் பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. விஜியின் உடலை கைப்பற்றி பிரத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கும் முயற்சியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.