![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/09/Wife-Saradha-Liquor-Drinks-Photo-Credit-Facebook-Pixabay-380x214.jpg)
செப்டம்பர் 01, பந்தலூர் (Nilgiris News): நீலகிரி மாவட்டத்தில் உள்ள பந்தலூர் (Pandalur), எருமாடு, பள்ளியரா கிராமத்தை சேர்ந்தவர் குமரன். இவரின் மனைவி சாரதா. தம்பதிகளுக்கு சுஜாதா, சுனிதா, பிரியா, சிவானந்தம் என நான்கு குழந்தைகள் இருக்கின்றனர்.
மதுபோதைக்கு அடிமையாகி இருந்த குமரன், எப்போதும் வேலைக்கு சென்றுவிட்டு இரவில் போதையுடன் வீட்டிற்கு வருவது வழக்கம். வீட்டில் தனது மனைவியுடன் தினமும் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவத்தன்று (ஆகஸ்ட் 31) அன்று இரவிலும் மதுபோதையில் வந்த குமரன், தனது மனைவி சாரதாவிடம் கடுமையான வாக்குவாதம் செய்துள்ளார்.
இதனால் ஆத்திரத்தின் உச்சத்திற்கு சென்ற சாரதா, கத்தியை எடுத்து கணவரின் கால்களில் வெட்டியுள்ளார். போதையில் இருந்த குமரன், கத்தி வெட்டுப்பட்டதன் வீரியம் தெரியாமல் அப்படியே படுத்து உறங்கியுள்ளார். Twitter (X) Audio Call: எலான் மஸ்க் வெளியிட்ட அட்டகாசமான அறிவிப்பு: இனி போன் நம்பர் இல்லாமல் கால் பண்ணலாம்..!
மனைவி சாரதாவும், தனது குழந்தைகளுடன் உறங்க சென்றுவிட்டார். அதிகாலை நேரத்தில் சாரதா எழுந்து பார்த்தபோது, வீடெங்கும் இரத்தம் நிரம்பி இருந்துள்ளது.
இதனைக்கண்டு அதிர்ந்தவர் கணவரை பார்த்தபோது, இரவில் ஆத்திரத்தில் கத்தியால் கால்களை வெட்டியபகுதியில் இருந்து இரத்தம் வெளியேறி உறுதியானது. அக்கம் பக்கத்தினரும் இந்நிகழ்வை கண்டுள்ளனர்.
இதனையடுத்து, தேவாலா காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்படவே, சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் குமரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும், இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து சாரதாவை கைது செய்தனர். இதனால் அவரின் 4 குழந்தைகளும் செய்வதறியாது விழிபிதுங்கி வருகின்றனர்.
மது தமிழ்நாட்டில் இருந்து ஒழிக்கப்படவேண்டிய முக்கிய விஷயங்களில் முதல் விஷயமாக இருக்கிறது. மதுவின் தாக்கத்தில் சிக்கி தலைமுறைகள் பாதிக்கப்படுவது வருத்தத்தை அளிக்கிறது. மதுவின் பாதிப்பு அதனை அருந்துபவருக்கு மட்டுமல்ல என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.