ஆகஸ்ட் 09, சென்னை (Chennai News): பெண் காவல் அதிகாரி குறித்து அவதூறாக பேசியதாக யூட்டியூபர் சவுக்கு சங்கர் (Youtuber Savukku Shankar) கோவை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். பின்னர் இதே குற்றச்சாட்டிற்காக 16 காவல் நிலையங்களில் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த 17 வழக்குகளையும் ஒன்றாக விசாரிக்கவும், ஒவ்வொரு வழக்கிற்காக ஒவ்வொரு ஊராக தன்னை அழைத்து செல்வதால், இந்த வழக்குகளுக்கு தடை விதிக்க வேண்டும் என்று அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு நீதிபதி ஜி.ஜெயச்சந்திரன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்த போது, சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்ட இந்த 17 வழக்குகளும் ஒரே குற்றத்திற்காக பதிவு செய்யப்பட்டதா? என்பது குறித்து காவல்துறை விளக்கமளிக்க வேண்டும் எனவும், அந்த 17 வழக்குகளின் விசாரணைக்கு தடை விதிக்க முடியாது எனவும் உத்தரவிட்டார். School Boy Dies In Classroom: வகுப்பறையில் உக்காந்திருந்த சிறுவன் துடிதுடித்து பலி; நெஞ்சை பதற வைக்கும் வீடியோ..!
குண்டர் சட்டம் ரத்து: தொடர்ந்து சவுக்கு சங்கரை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைத்துள்ளதை எதிர்த்து அவரது தாயார் ஆர்கொணர்வு மனுவை தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கின் விசாரணையின் இறுதி தீர்ப்பு இன்று வழங்கப்பட்டது. அப்போது நீதிபதிகள்,"சவுக்கு சங்கர் பேசியது தொடர்பாக அந்த அந்த பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யலாம். தண்டனை வாங்கி கொடுக்கலாம். குண்டர் சட்டம் தேவையில்லாத்து" என தெரிவித்தனர். மேலும், வேறு வழக்குகளில் தேவையில்லை என்றால் சவுக்கு சங்கரை உடனடியாக விடுதலை செய்யவும் ஆணை பிறப்பித்தனர்.