ஜனவரி 19, சென்னை (Chennai): இந்தியாவில் உள்ள விளையாட்டு வீரர்களின் திறமைகளை கண்டறிந்து, அவர்களை சர்வதேச அளவில் அங்கீகாரப்படுத்தும் நோக்கில் கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடந்த 2018ம் ஆண்டு முதல் நடத்தப்படும் கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு (Khelo India Youth Games) போட்டிகளின் 6வது ஆண்டு தொடக்க நிகழ்ச்சி இன்று சென்னையில் நடைபெற்றது.
13 நாட்களில் பல போட்டிகள்: இன்று (ஜனவரி 19, 2024) முதல் ஜன. 31ஆம் தேதி வரை தமிழ்நாட்டில், ஆறாவது கேலோ இந்தியா 2023 போட்டிகள் நடக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் உள்ள சென்னை, திருச்சி, மதுரை, கோவை ஆகிய நான்கு நகரங்களில், பல்வேறு பிரிவுகளில் இந்த போட்டிகள் நடத்தப்படுகின்றன. இதற்காக இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்கள் & யூனியன் பிரதேசங்களை சேர்ந்த பல வீரர்-வீராங்கனைகள் என 5,500 பேர் வந்துள்ளனர். Guidelines for Regulation of Coaching Centre: 16 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கு அனுமதி இல்லை... நீட் பயிற்சி மையத்திற்கு கட்டுப்பாடு.. மத்திய அரசு அதிரடி..!
சுடரேற்றி தொடங்கி வைத்த பிரதமர்: இப்போட்டியை நேரலையில் தொலைக்காட்சி வாயிலாக டிடி தமிழ் ஸ்போர்ட்ஸ் (DD Sports), யூடியூப் வாயிலாக பிரசார் பாரதி ஸ்போர்ட்ஸ் (Prasar Bharati Sports) என்ற சேனலிலும் நேரலையில் பார்க்கலாம். இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி கேலோ இந்தியா விளையாட்டுப்போட்டிக்கான சுடரை தனது கரங்களால் ஏற்றினார். இந்நிகழ்வின்போது பிரதமர் நரேந்திர மோடியுடன் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவி, தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், மத்திய அமைச்சர் அனுராக் சிங் தாகூர் உட்பட பலரும் விழா மேடையில் இருந்தனர்.
பிரதமர் பேச்சு: நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் நரேந்திர மோடி, "கேலோ இந்தியா விளையாட்டில் கலந்துகொண்டுள்ள அனைவர்க்கும் எனது வாழ்த்துக்கள். கேலோ இந்தியா போட்டிகள் இந்திய வீரர்-வீராங்கனைகள் பலரையும் ஊக்குவித்துள்ளது. பல போட்டியாளர்கள் அடையாளம் காணப்பட்டதே சர்வதேச அளவிலான போட்டிகளில் இந்தியா பெற்ற வெற்றிக்கான காரணமாக அமைந்துள்ளது. கேலோ இந்தியா, பாரா கேலோ இந்தியா உட்பட பல்வேறு போட்டிகள், புதிய போட்டியாளர்களுக்கு வாய்ப்பை வழங்கி அவர்களை அடையாளப்படுத்துகிறது.
புதிய வளர்ச்சிப்பாதையில் விளையாட்டுத்துறை: 'ஒரே பாரதம், உன்னத பாரதம்' என்ற கூற்றுப்படி அன்போடு வரவேற்ற தமிழ் மக்களின் கலாச்சாரம் என்னை வீட்டில் இருப்பது போல உணர்த்துகிறது. 2014ம் ஆண்டுக்கு பின்னர் விளையாட்டு நமது வீரர்கள் புதிய வேகத்துடன் களமிறங்கி வெற்றிகளை குவிகிறார்கள். அதன் அடையாளமாக ஆசிய, பாரா ஆசிய போட்டிகளில் பல பதக்கங்களை வாங்கி நாட்டிற்கு பெருமிதம் சேர்த்து வரலாறு படைத்துள்ளனர். கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு நிலைமை அப்படி இல்லை. இன்று நமது அரசாங்கம் விளையாட்டு போட்டிகளை புதிய வளர்ச்சிப்பாதையில் எடுத்து செல்கிறது. பல போட்டிகளில் அடுத்தடுத்து கிடைத்த வெற்றிகளும் நமக்கு எளிதாக கிடைக்கவில்லை. கடந்த 10 ஆண்டுகளாக வழங்கப்பட்ட அடுத்தடுத்த உழைப்பின் பலன் தற்போது கிடைத்துள்ளது" என பேசினார்.
#WATCH | Prime Minister Narendra Modi inaugurates the 6th Khelo India Youth Games 2023 at Jawaharlal Nehru Stadium in Chennai, Tamil Nadu pic.twitter.com/6bE2Cm39D6
— ANI (@ANI) January 19, 2024