TVK Vijay Tribute to Rani Velu Nachiyar (Photo Credit: @tvkvijayhq X)

ஜனவரி 03, பனையூர் (Chennai News): 2026 சட்டப்பேரவை தேர்தலில் களமிறங்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவேன் என்ற முழக்கத்துடன், தனது திரைப்பட உலகின் உச்சத்தை தள்ளிவிட்டு, இளையதளபதி என ரசிகர்களால் அழைக்கப்படும் விஜய் (TVK Vijay), தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam) என்ற கட்சியை தொடங்கி அரசியல் பயணத்தை ஆரம்பித்து இருக்கிறார். கட்சியின் கொள்கை அறிவிப்பு மாநாட்டில் மதவாத, பிளவுவாத, ஊழல்வாத அரசியல் கட்சிக்கு எதிராக குரல் கொடுத்தவர், நேரடியாக திமுகவை தாக்கி பேசி இருந்தார். மேலும், அரசியல் பயணம் காரணமாக தமிழகத்தின் மறைந்த தலைவர்களுக்கும் தொடர்ந்து மரியாதை செய்து, மக்கள் மத்தியில் தன்னை முன்னிறுத்திக்கொள்கிறார். Coimbatore Gas Tanker கோவையில் எல்பிஜி கேஸ் லாரி விபத்து; களத்தில் இறங்கும் தேசிய பேரிடர் மீட்புப்படை - மாவட்ட ஆட்சியர் விளக்கம்.! 

வீரமங்கை வேலுநாச்சியார்:

ஜனவரி 03, 2025ம் தேதியான இன்று சிவகங்கை சீமை தந்த, தென்னாட்டு ஜான்சி ராணி என போற்றப்பட்ட, வீரமங்கை வேலுநாச்சியார் (Velu Nachiyar) பிறந்த தினம் கொண்டாடப்படுகிறது. வளரி, சிலம்பம், களரி என பல தற்காப்பு கலைகளில் சிறந்து விளங்கிய வேலு நாச்சியார், உருது, ஆங்கிலம், பிரெஞ்சு ஆகிய மொழிகளும் கற்றுத்தேர்ந்தவர் ஆவார். ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி போராடிய வீரமங்கை, தனது கற்றல்-ஆக்ரோஷத்தால் இன்றளவும் வீரம்-கல்வி நிறைந்த மங்கையாகவும் அறியப்படுகிறார். தவெக கட்சி கொள்கையில், வீரமங்கை வேலுநாச்சியாரும் முக்கிய இடத்தை பெற்றிருந்தார். அவரை அரசியல் வழிகாட்டியாகவும் தவெக ஏற்றுக்கொண்ட நிலையில், வேலு நாச்சியாருக்கு மரியாதை செலுத்தப்பட்டது.

பெண்களின் நலன்கள் காப்போம் - தவெக உறுதி:

இதுகுறித்து அக்கட்சித் தலைமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "ஆங்கிலேயர்களுடன் சண்டையிட்டுச் சொந்த மண்ணை மீட்டெடுத்து, விடுதலைப் போராட்டத்தில் நாட்டுக்கே முன்னோடியாகப் போர்க்களத்தில் தீரத்துடன் களமாடிய எங்கள் கொள்கைத் தலைவி வீரமங்கை ராணி வேலு நாச்சியார் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி, சென்னை, பனையூரில் உள்ள எமது கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினேன். வீரமங்கை வேலு நாச்சியார் அவர்களது பிறந்த நாளில், பெண்ணுரிமை போற்றுவோம், பெண்களின் நலன்கள் காப்போம், பெண்களின் பாதுகாப்பிற்கு எப்போதும் அரணாக இருப்போம் என்று உறுதி ஏற்போம்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தவெக தலைவர் விஜய், வேலுநாச்சியாரின் உருவப்படத்திற்கு மரியாதை செலுத்திய காட்சி: