மே 09, ஈரோடு (Erode News): ஈரோடு மாவட்டம், நசியனூர் சாலையை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர், 9ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்துள்ளார். பின்னர், வேலைக்கு சென்று வந்துள்ளார். இந்நிலையில், ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன் ( வயது 21) என்பவருடன் சிறுமிக்கு பழக்கம் ஏற்பட்டுள்ளது. 12th Board Exam Result: +2 தேர்வில் மாற்றுத் திறனாளி மாணவர் சாதனை.. கோரிக்கையை நிறைவேற்ற முதல்வர் ஸ்டாலின் உத்தரவு..!
சிறுமி பாலியல் வன்கொடுமை:
இதனையடுத்து, 17 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தைக் கூறி தனியாக சந்திக்க விரும்புவதாக வாலிபர் கூறியுள்ளார். இதனை நம்பி சிறுமி அங்கு சென்றுள்ளார். அங்கு, கிருஷ்ணன் உட்பட அவரது நண்பர்கள் சந்தோஷ் (வயது 25), மணிகண்டன் (வயது 25) மற்றும் குகன் (வயது 23) ஆகிய நால்வரும் மது போதையில் இருந்துள்ளனர். அப்போது, சிறுமியை மிரட்டி 4 பேரும் பாலியல் வன்கொடுமை (Gang Rape) செய்துள்ளனர். இதன்பின்னர், பாதிக்கப்பட்ட சிறுமி, நடந்தவற்றை தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். உடனே, ஈரோடு அனைத்து மகளிர் காவல்நிலையத்தில், சிறுமியின் பெற்றோர் புகார் அளித்தனர்.
4 பேர் கைது:
புகாரின்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், ஈரோடு வி.வி.சி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கிருஷ்ணன், சென்னிமலை சாலை மணல்மேட்டை சேர்ந்த வடிவேல் மகன் சந்தோஷ், ஈரோடு சாஸ்திரி நகரை சேர்ந்த முருகேசன் மகன் மணிகண்டன், மரப்பாலத்தை சேர்ந்த ரவி மகன் குகன் என 4 பேரை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெண்கள் மற்றும் குழந்தைகள் உதவி எண்கள்:
சைல்டுலைன் இந்தியா - 1098; பெண்கள் உதவி எண் - 181; தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் - 112; வன்முறைக்கு எதிரான தேசிய மகளிர் ஆணையம் ஹெல்ப்லைன் – 78271 70170; போலீஸ் பெண்கள் / மூத்த குடிமக்கள் உதவி எண் - 1091 / 1291; காணாமல் போன குழந்தை மற்றும் பெண்கள் குறித்து புகார் அளிக்க - 1094. ஆன்லைன் வழியாக பெண்கள் & குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் குறித்து புகார் அளிக்க: https://eservices.tnpolice.gov.in/CCTNSNICSDC/ComplaintRegistrationPage?3