மே 16, சோளிங்கர் (Ranipet News): இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள சோளிங்கர் பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரின் மனைவி சுமதி. தம்பதிகளுக்கு கடந்த 2016ம் ஆண்டு பெண் குழந்தை பிறந்துள்ளது.
இதற்கிடையில், உடலநலக்குறைவால் அவதிப்பட்ட சுமதி, குழந்தை பிறந்த 2 மாதத்திலேயே உயிரிழந்தார். இதற்குப்பின், திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள நாட்டேரி கிராமத்தில் வசித்து வரும் ராதிகா என்ற பெண்மணியை சந்திரசேகர் இரண்டாவதாக திருமணம் செய்துள்ளார்.
கடந்த 2022ம் ஆண்டு மே மாதம் சந்திரசேகரின் குழந்தைக்கு மயக்கம் ஏற்பட்டு சோளிங்கர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்யப்பட்டுள்ளது. அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர்கள், சிறுமி இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். Vodafone: 11 ஆயிரம் பேரை பணிநீக்கம் செய்ய காத்திருக்கும் வோடபோன் நிறுவனம்.. திருப்தி இல்லாததால் சிஇஓ முடிவு..!
இந்நிலையில், சிறுமியின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தடவியல் சோதனைக்கும் பரிந்துரைக்கப்பட்டது. அதன் முடிவுகள் தற்போது வெளியான நிலையில், அதன்படி, குழந்தை தலையணை வைத்து அழுத்தி மூச்சு திணறி உயிரிழந்தது தெரியவந்தது.
இதனையடுத்து, சிறுமியின் தந்தை சந்திரசேகர் மற்றும் அவரின் இரண்டாவது மனைவி ராதிகா ஆகியோரை கைது செய்து நடத்திய விசாரணையில், சிறுமியின் சித்தி குழந்தையை கொலை செய்ததும், அந்த உண்மை தெரிந்த சந்திரசேகரும் மனைவியை காப்பாற்ற ஒத்துழைப்பு கொடுத்துள்ளார் என்பது அம்பலமானது.
இறுதியில் சிறுமியை கொலை செய்த சித்தி ராதிகா, சிறுமியின் தந்தை சந்திரசேகர் ஆகியோர் ஓராண்டு கழித்து கைது செய்யப்பட்டனர்.