
பிப்ரவரி 27, அண்ணா நகர் (Chennai News): சென்னையில் உள்ள அண்ணா நகா் (Anna Nagar), அன்னை சத்யா நகரில் வசித்து வருபவர் எட்வீன். இவரது மகன் ராபர்ட் (வயது 28). இவர் மீது கொலை, வழிப்பறி உட்பட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன. இந்நிலையில், நேற்று (பிப்ரவரி 26) அன்னை சத்யா நகா் முதல் தெருவில் நின்று கொண்டிருந்தபோது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த 6 போ் கொண்ட மர்ம கும்பல், அவரை வெட்டிக் கொலை (Murder) செய்துவிட்டு அங்கிருந்து தப்பியோடினர். Mother Kills Son: குடிபோதையில் தகராறு; மகன் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை.. தாய் கொடூர செயல்..!
ரவுடி வெட்டிக் கொலை:
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர், அவரது உடலை மீட்டு கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இதுகுறித்த விசாரணையில், 2019ஆம் ஆண்டு ராபா்ட்டின் நண்பரான கோகுல் என்பவரை அயனாவரத்தில் வசித்து வந்த ரவுடி லோகு குழுவினர் கொலை செய்தனர். இந்தக் கொலைக்கு பழி வாங்க ராபா்ட் காத்திருந்தார். இதனையறிந்த அயனாவரம் லோகு கும்பலைச் சோ்ந்தவா்கள்தான், இந்தக் கொலையில் ஈடுபட்டிருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.
பெண்ணை தாக்கிய கும்பல்:
இதனைத்தொடர்ந்து, அயனாவரம் பகுதியில் பெண் ஒருவரை அதே மர்ம கும்பல், மிக கொடூரமாக தாக்குதல் நடத்தி தப்பிச் சென்றுள்ளது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த அண்ணா நகா் காவல்துறையினர், ரத்த வெள்ளத்தில் கிடந்த பெண்ணை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அடுத்தடுத்து நடந்த இந்தக் கொலை சம்பவங்கள் குறித்து, பல சந்தேக கோணங்களில் அண்ணா நகர் மற்றும் அயனாவரம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவங்கள் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.