Transgender Pension Scheme (Photo Credit: @TNDIPRNews X / Pixabay)

செப்டம்பர் 24, சென்னை (Chennai News): தமிழ்நாடு சமூக நலன் & மகளிர் உரிமைத்தொகை, தமிழ்நாடு திருநங்கையர் நல வாரியம் சார்பில், திருங்கையரின் முன்னேற்றத்திற்காக பல திட்டங்கள் தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதன் வாயிலாக தகுதியுள்ள பயனாளருக்கு மாத உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்றவை வழங்கப்படுகின்றன. இன்று ஆதரவற்ற திருநங்கைகளுக்கு வழங்கப்படும் மாத உதவித்தொகை குறித்த தகவலை தெரிந்துகொள்ளலாம்.

திருநங்கையர்களின் முன்னேற்றத்திற்கு பிரத்தியேக குழு:

திருநங்கைகளை பாதுகாக்கவும், அவர்களின் வளர்ச்சிக்கு உதவிடவும் தமிழ்நாடு திருநங்கையர் நலவாரியம் செயல்படுகிறது. இந்த வாரியத்தில் சமூக நலத்த்துறை அமைச்சரின் தலைமையில் 11 அலுவல்சார் உறுப்பினர்கள், 12 திருநங்கையர்கள் மற்றும் 1 பெண் கொண்ட அதிகாரிகள் இருப்பார்கள். மாவட்ட அளவிலான திருநங்கையர்களை கண்டறிவதற்கு எதுவாக, மாவட்ட அளவில் குழுவும், ஆட்சியர் தலைமையில் 3 அலுவல் சார் உறுப்பினர்களும், 4 அலுவல் சாரா உறுப்பினர்களும் இடம்பெற்று இருப்பார்கள். Savings vs Current Account: சேவிங்ஸ் அக்கவுண்ட் VS கரண்ட் அக்கவுண்ட்.. வித்தியாசம் என்ன தெரியுமா?!

பெறப்படும் உதவித்தொகைகள்:

திருநங்கையருக்கான அடையாள அட்டையின் வாயிலாக, அவர்களுக்கு வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை, வீட்டுமனைப் பட்டா, மருத்துவ வசதி, இலவச வீட்டுவசதி, கல்வி உதவித்தொகை, திறன் வளர்க்கும் பயிற்சி, சுயஉதவிக்குழு வாயிலாக உதவிகள் வழங்கப்படும். மேற்கூறிய அரசின் ஆதரவற்றோர் உதவித்தொகை பெற, திருநங்கை நலவாரியத்தில் பதிவு செய்து அடையாள அட்டையை வைத்திருக்க வேண்டும்.

உதவித்தொகை பெற வரம்பு:

ஆதரவற்ற திருநங்கை உதவித்தொகை பெற உடல் உழைப்பால் சம்பாதிக்க இயலாத, 40 வயதுக்கு மேற்பட்ட ஆதரவற்ற ஏழை திருநங்கை, ரூ.1500 உதவித்தொகை பெரும் திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம். கடந்த 2023ம் ஆண்டு மார்ச் மாதம் வரை ரூ.1000 என வழங்கப்பட்டு வந்த உதவித்தொகை, ரூ.1500 ஆக உயர்த்தி தற்போது வழங்கப்படுகிறது.