Poison | Death File Pic (Photo Credit: Pixabay)

மே 23, மெஞ்ஞானபுரம் (Thoothukudi News): தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள மெஞ்ஞானபுரம் அருகே தாய்விளை நடுத்தெருவை சேர்ந்த தம்பதி சுரேஷ் - அமுதா. இத்தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். தம்பதி இடையே குடும்பத் தகராறு காரணமாக, அமுதா தனது கணவரை பிரிந்து மகன்களுடன் தனியாக வசித்து வருகிறார். TN School Opening Date: பள்ளிகளுக்கு கோடை விடுமுறை நீட்டிப்பு?.. டுவிஸ்ட் வைத்த பள்ளிக்கல்வித்துறை.. அதிரடி உத்தரவு.!

உறவினர் கண்டிப்பு:

இந்நிலையில், இவரது மூத்த மகன் சபரிமுத்து (வயது 14) மெஞ்ஞானபுரத்தில் உள்ள தனியார் பள்ளியில் 9ஆம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது, கோடை விடுமுறை என்பதால், வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் அங்குள்ள கடையில் சிறுவன் சிகரெட் வாங்கியுள்ளார். அதனை அவரது பெரியம்மா முத்துலெட்சுமி பார்த்து கண்டித்துள்ளார். இந்த விவகாரம் அம்மாவுக்கு தெரிந்துவிடும் என்று நினைத்து, மிகவும் பயத்தில் இருந்துள்ளார்.

விஷம் குடித்து தற்கொலை:

இதனையடுத்து, வீட்டில் இருந்த களைக்கொல்லி மருந்தினை எடுத்து குடித்துள்ளார். சற்று நேரத்தில் வாந்தி எடுத்து கீழே மயங்கி விழுந்தார். உடனே அவரது தாயார் மகனை மீட்டு, நெல்லையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்கு கொண்டு சேர்த்துள்ளார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி சிறுவன் பரிதாபமாக (Suicide) உயிரிழந்தார். இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த மெஞ்ஞானபுரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.