
மே 23, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் கடந்த சில வாரங்களாகவே கோடை வெயிலின் தாக்கமானது கடுமையான அளவு அதிகரித்து இருந்தது. இதனால் வானிலை ஆய்வு மையமும் பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்லும்போது கவனமுடன் இருக்குமாறு அறிவுறுத்தி இருந்தது. கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாக வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. Chennai News: குளிர்பானத்தில் கிடந்த கண்ணாடி துண்டு; சிறுமிக்கு நேர்ந்த ஷாக் சம்பவம்.. பெற்றோர்களே உஷார்.!
குறிப்பிட்ட தேதியில் பள்ளி திறப்பு :
இதனால் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு வெயில் படிப்படியாக குறையும் என கணிக்கப்பட்டுள்ளதால், தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 2 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், "தமிழகத்தில் 6ஆம் வகுப்பு முதல் 9ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு இறுதித்தேர்வு முடிந்து கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திட்டமிட்டபடி அனைத்தும் நடைபெற சுற்றறிக்கை :
ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் கோடை வெயில் சுட்டெரித்தாலும் தற்போது வானிலை சாதகமாக இருக்கிறது. இதனால் பள்ளிகள் திறப்பு தேதியில் எந்தவிதமான மாற்றமும் இல்லை. ஜூன் 2-ஆம் தேதி திட்டமிட்டபடி பள்ளிகள் திறக்கப்படும். அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளை திறப்பதற்கான பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என தெரிவித்துள்ளார்.