செப்டம்பர் 04, சிகாகோ (Tamil Nadu News): தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின், தமிழ்நாடு மாநிலத்தின் தொழில் வளர்ச்சியை 1 ட்ரில்லியன் டாலர் இலக்கை நோக்கி பயணித்து வருகிறார். இதற்காக அரசுமுறை பயணமாக, உலகளாவிய முதலீட்டாளர்களை ஈர்க்க அமெரிக்கா சென்றுள்ளார். அமெரிக்கா (TN CM MK Stalin US Visit) புறப்பட்டுச் சென்ற முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு, அங்குள்ள தமிழர்கள் உற்சாக வரவேற்பு வழங்கி இருந்தனர்.
முதலீடு: இதனிடையே, அமெரிக்காவில் உள்ள சான் பிரான்சிஸ்கோ நகரில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் இன்று 7 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறப்பட்டுள்ளன. அதன்படி, சென்னையில் உள்ள தரமணி பகுதியில் அப்லைட் மெடீரியல்ஸ் (Applied Materials) நிறுவனம் சார்பில் புதிய செமி கண்டெக்டர் ஆலை, சிறுசேரியில் ரூ.450 கோடி செலவில் நோக்கியா நிறுவனத்தின் தொழிற்சாலை, கீக்மைன்ட்ஸ் நிறுவனத்தின் தொழில்நுட்ப ஆராய்ச்சி மையம், பேபால் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம், மைக்ரோசிப், இன்பிக்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இதன் வாயிலாக எதிர்காலத்தில் தமிழ்நாட்டில் தொடர்ந்து வேலைவாப்பு பெருகும் என எதிர்பார்க்கப்படுகிறது. Navy Helicopter Crash: கடற்படை ஹெலிகாப்டர் கடலில் விழுந்து விபத்து; 3 பேர் மாயம்.. மீட்பு பணிகள் தீவிரம்..!
சிகாகோவில் சைக்கிள் பயணம்: மேலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்குள்ள சிகாகோ நகரில் மாலை வேளையில் கடற்கரையோரம் சைக்கிள் ஓட்டியபடி சென்ற காட்சிகளை தனது எக்ஸ், பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில் அவர், “மாலையின் அமைதி, புதிய கனவுகளுக்கான களத்தை அமைக்கிறது” என்று பதிவிட்டுள்ளார். தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சைக்கிள் பயணம் (Cycle Ride) சென்ற வீடியோ சோஷியல் மீடியாவில் பரவலாக பகிரப்பட்டு வருகிறது.
Evening’s calm sets the stage for new dreams. pic.twitter.com/IOqZh5PYLq
— M.K.Stalin (@mkstalin) September 4, 2024