
ஜூலை 03, சிகாகோ (World News): அமெரிக்காவின் சிகாகோ (Chicago) மாநகரத்தில் உள்ள ஒரு இரவு விடுதிக்கு வெளியே நேற்று (ஜூலை 02) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் நிகழ்ந்துள்ளது. மேற்கு சிகாகோ அவென்யூவின் 300வது தொகுதியில், ஆர்டிஸ் லவுஞ்சிலிருந்து மக்கள் வெளியேறியபோது இந்த சம்பவம் நிகழ்ந்தது. அங்கு ராப்பர் மெல்லோ பக்ஸ்ஸின் ஆல்ப வெளியீட்டு விழா நடந்து கொண்டிருந்தது. PM Modi Visit: 8 நாட்கள் அரசுமுறை பயணம்.. வெளிநாடு பயணத்தை தொடங்கிய பிரதமர்.!
4 பேர் பலி:
அப்போது, 4 பேர் துப்பாக்கிச் சூட்டில் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 14 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருவதாக சிகாகோ காவல்துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். இதில், 3 பேரின் உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. இதுதொடர்பாக, காவல்துறை அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.