TN SSLC Result 2023 Webpage

மே 19, சென்னை (Chennai): தமிழ்நாடு முழுவதும் கடந்த ஏப்ரல் 6-ம் தேதி பத்தாம் வகுப்புகளுக்கான அரசு பொதுத்தேர்வுகள் தொடங்கின. இந்த தேர்வு ஏப்ரல் 20-ம் தேதி நடைபெற்று முடிந்த நிலையில், தேர்வு முடிவுகள் விரைவில் வெளியாகும் என பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஏற்கனவே தெரிவித்திருந்தார். இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன் மே மாதம் 19-ம் தேதி பத்தாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முடிவுகள் காலை 10 மணியளவில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி தற்போது தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. தேர்வர்கள் தங்களது தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை வைத்து தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம். அதற்கு அரசின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in-ல் சென்று பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் என்பதை தேர்வு செய்து, நமது பதிவு எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை உள்ளிட்டு முடிவுகளை அறிந்து கொள்ளலாம். Central Law Minister: புதிய மத்திய சட்டத்துறை அமைச்சராக பொறுப்பேற்றார் அர்ஜுன் ராம் மெக்வால்; கிரண் ரஜிஜூ-வுக்கு இலாகா மாற்றம்..!

அதேபோல 09282232585 என்ற எண்ணுக்கு TNBOARD10 என்று எஸ்எம்எஸ் மூலமாகவும் தேர்வு முடிவுகள் வெளியாகும். செல்போனிலேயே அதன் முடிவுகளை அறிந்து கொள்ளலாம். தேர்வு முடிவுகளுக்காக tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in மற்றும் dge.tn.gov.in உள்ளிட்ட நான்கு இணையதளங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றின் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.

பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளை பொறுத்தவரையில் மொத்தமாக தமிழ்நாட்டில் 91.39% amilnaduமாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். 4,30,710 பெண்களும், 4,04,904 ஆண்களும் இந்த தேர்வில் தேர்ச்சியடைந்துள்ளனர். தேர்வு முடிவுகள் படி 94.66% பெண்களும், 88.16% ஆண்களும் தேர்ச்சி அடைந்துள்ளனர்.