ஆகஸ்ட் 28, தென்காசி (Tenkasi News): தென்காசி மாவட்டத்தில் உள்ள திருச்சிற்றம்பலம் கிராமத்தில் இருந்து, விவசாய பணிகளுக்காக இன்று விவசாய தொழிலாளர்கள் லோடு ஆட்டோவில் அழைத்து செல்லப்பட்டனர். ஆண்கள்-பெண்கள் என சுமார் 20 பேர் வரை லோடு ஆட்டோவில் பயணித்ததாக தெரியாவருகிறது. இவர்கள் திருச்சிற்றம்பலத்தில் இருந்து ஆனைக்குளம் பகுதிக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளனர். அதிகாலை நேரத்தில் லோடு ஆட்டோ சுரண்டை (Surandai) அருகே பயணம் செய்துகொண்டிருந்த நிலையில், சாலையின் குறுக்கே திடீரென நாய் ஒன்று வந்துள்ளது. இதனைக்கண்ட ஓட்டுநர், நாயின் மீது மோதாமல் இருக்க வாகனத்தை லேசாக திருப்ப முயற்சித்துள்ளார். அச்சமயம் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது. Baby Girl Sold: ரூ.1 லட்சத்துக்கு பெண் குழந்தை விற்பனை.. தாய் உட்பட 3 பேர் கைது..!
3 பெண்கள் பலி., 12 பேர் படுகாயம்:
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த இந்த சோகத்தில் ஜானகி (வயது 52), வள்ளியம்மாள் (வயது 60), பேச்சி (வயது 60) ஆகிய 3 பெண் தொழிலாளர்கள் நிகழ்விடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், 12 பேர் காயமுற்று அலறித்துடித்தனர். தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள், காயமடைந்தோரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதி செய்தனர். மேலும், அதிகாரிகள் பலியானோரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விஷயம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். நாயின் உயிரை காக்க எண்ணி நடந்த சோகத்தில், 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தது அப்பகுதியில் பெருத்த துக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜின் இயக்கத்தில் எளிமையான படைப்பாக வெளியாகி, மிகப்பெரிய அளவில் வெற்றியை குவித்துள்ள வாழை திரைப்படத்தின் இறுதிக்காட்சி உண்மை சம்பவத்தை தழுவி எடுக்கப்பட்டது ஆகும். அதேபோல, தற்போது சோகம் ஒன்று நடந்துள்ளது.