வானிலை: 9 மாவட்டங்களில் காலை 10 மணி வரை இடி, மின்னலுடன் வெளுக்கும் மழை.. குடை எடுத்துட்டு போங்க மக்களே.!
தமிழகத்தில் 9 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு, அதாவது ஆகஸ்ட் 11 (இன்று) காலை 10 மணி வரை இடி-மின்னலுடன் மிதமான மழை தொடரும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 11, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்னிந்திய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமாகி உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக நேற்று வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருவள்ளூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், பெரம்பலூர், விழுப்புரம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கிருஷ்ணகிரி, தர்மபுரி, நாகப்பட்டினம், சேலம், சிவகங்கை, நீலகிரி, தேனி, மதுரை, திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்தது.
காலை 10 மணி வரை மழைக்கு வாய்ப்புள்ள மாவட்டங்கள் :
இந்த நிலையில் இன்று தமிழகத்தில் காலை 10 மணி வரை அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தற்போது அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி கடலூர், தஞ்சை, மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகளில் இடி, மின்னலுடன் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. Bank Jobs: எஸ்.பி.ஐ வங்கியில் 6,589 காலிப்பணியிடங்கள்; உடனே அப்ளை பண்ணுங்க.!
சென்னை வானிலை இன்று (Chennai Weather):
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பை பொறுத்தவரையில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய, லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 26-27° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.
(The above story first appeared on LatestLY on Aug 11, 2025 08:10 AM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).

