வானிலை: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!

திருப்பத்தூர், ஈரோடு, சேலம் உட்பட 5 மாவட்டங்களில் இன்று கனமழை (Tamilnadu Rain Update) பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

வானிலை: இடி, மின்னலுடன் வெளுக்கப்போகும் கனமழை.. வானிலை மையம் எச்சரிக்கை.!
Today Weather Tamilnadu (Photo Credit: Team LatestLY)

ஆகஸ்ட் 09, நுங்கம்பாக்கம் (Chennai News): தென்மேற்கு பருவமழை வடதமிழகத்தில் தீவிரமாக உள்ளது. டெல்டா மாவட்டங்களில் மழையின் தீவிரம் அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் அதிகபட்சமாக 11 செமீ மழை பெய்துள்ளது. கடலூர் மாவட்டம் காட்டு மயிலூரில் 10 சென்டிமீட்டர் மழையும், கடலூர் மாவட்டம் வேப்பூர் நெய்வேலி, மாத்தூர் பகுதிகளில் 9 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது. இவை தவிர்த்து பெரம்பலூர், மதுரை, தர்மபுரி, தஞ்சாவூர், விழுப்புரம், திருவண்ணாமலை, புதுக்கோட்டை, திருவள்ளூர், திருச்சி, கள்ளக்குறிச்சி உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. Madurai News: பேசியபடி சிக்கன் ரைஸ் சாப்பிட்ட இளம்பெண் வாந்தி எடுத்து மரணம்.. கண்ணீரில் உறவினர்கள்.! 

இன்றைய வானிலை (Today Weather) & நாளைய வானிலை (Tomorrow Weather):

தெற்கு கடலோர ஆந்திர பிரதேச மாநிலங்களில் மேல் வளிமண்டல கீழ் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. தென்னிந்திய பகுதிகளின் மேல் வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதனால் 9ம் தேதியான இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யலாம்.

* தர்மபுரி

* கிருஷ்ணகிரி

* திருப்பத்தூர்

* ஈரோடு

* சேலம் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளிலும் இடி-மின்னலுடன் கூடிய லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும்.

சென்னை வானிலை இன்று (Chennai Weather):

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளை பொறுத்தவரையில், இன்றும்-நாளையும் வானம் மேகளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலையாக இன்றும், நாளையும் 35 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 26 டிகிரி செல்சியசும் பதிவாகலாம். மீனவர்களுக்காக எச்சரிக்கையை பொறுத்தவரையில், இன்றும்-நாளையும் தென் தமிழக கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல், தென்மேற்கு வங்கக்கடலில் சில பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 50 கிலோமீட்டர் முதல் 60 கிலோமீட்டர் வரை வீசலாம் என்பதால், இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறது.

(The above story first appeared on LatestLY on Aug 09, 2025 04:59 PM IST. For more news and updates on politics, world, sports, entertainment and lifestyle, log on to our website latestly.com).