மே 13, தலைமை செயலகம் (Chennai News): தமிழ்நாட்டு மக்களிடம் குறிப்பாக பெண்களிடம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ள மகளிர் உரிமைத்தொகை திட்டம் கடந்த 2023 ஆம் ஆண்டு செப்டம்பரில் இருந்து செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் மூலம் 1 கோடியே 14 இலட்சத்து 61 ஆயிரம் பெண்கள் பயன் பெற்று வரும் நிலையில், பயனாளிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மாத மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
அமைச்சர்களிடம் முறையிட்ட பெண்கள் :
இத்திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த குடும்பத்தலைவிகளுக்கு மாத மாதம் பணம் வழங்கப்பட்டு வரும் நிலையில், ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதியன்று அவரவர் வங்கி கணக்கில் உரிமைத்தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த நிலையில் மாதம் ரூ.1000 கிடைக்காத பெண்கள் எங்களுக்கும் மாதம் ரூ.1000 வேண்டும் என அமைச்சர்களிடம் தொடர்ந்து முறையிட்டு வந்ததால் அதற்கு தீர்வு காணும் வகையில் ஜூன் 4-ம் தேதி மக்களுடன் முதல்வர் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. Gold Silver Price: தங்கம் விலை சவரனுக்கு ரூ.120 உயர்வு.. இன்றைய விலை நிலவரம் இதோ..!
மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் விண்ணப்பிக்க அறிவிப்பு :
இந்நிகழ்ச்சியின் மூலம் விடுபட்ட பெண்களும் ரூ.1000 மகளிர் உரிமை தொகை கேட்டு விண்ணப்பிக்கலாம் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருந்தார். மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் மகளிர் உரிமைத் தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளதால் தமிழ்நாடு முழுவதும் 9000 இடங்களில் முகாம்கள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.