பிப்ரவரி 04, காரைக்குடி (Sivagangai News): சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி, அண்ணா நகர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ லலிதா முத்து மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் சமீபத்தில் குடமுழுக்கு நடைபெற்றது. அப்பகுதியில் இந்து - இஸ்லாமிய மக்கள் பெரும்பான்மையாக வாழ்ந்து வரும் நிலையில், இருவரும் சகோதரத்துவத்துடன், அன்பு பாராட்டி வாழ்கின்றனர். இதன் அடையாளமாக, கோவில் குடமுழுக்கு திருவிழாவுக்கு இஸ்லாமிய சகோதர-சகோதரிகள் பலரும் சீர்வரிசை எடுத்து வந்து இருந்தனர். அவர்களுக்கு கோவில் நிர்வாகம் மற்றும் உள்ளூர் மக்கள் சார்பில் மங்கள வாத்தியங்கள் முழங்க உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின் குடமுழுக்கு தீர்த்த நீர் தெளிக்கப்பட்டு, அன்னதானத்தில் அவர்கள் கலந்துகொண்டு அம்மனின் அருளை பெற்று விழாவினை சிறப்பித்து இருந்தனர். இந்த விஷயம் தொடர்பான காணொளி வெளியாகி வைரலாகி வருகிறது. Kerala Lottery 2024-2025: கோடிகளை அள்ளப்போவது யார்? கேரளா லாட்டரி 2024 - 2025: அசத்தல் தகவல் இங்கே.! 

மதநல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக விளையாகிய இஸ்லாமிய சகோதர-சகோதரிகள்:

(ட்விட்டர், இன்ஸ்டாகிராம் மற்றும் யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடக உலகின் சமீபத்திய முக்கிய செய்திகள், வைரல் செய்திகளை சோசியலி (SocialLY) உங்களுக்குக் கொண்டு வருகின்றன. மேலே உள்ள இடுகை நேரடியாக ஒரு பயனரின் சமூக ஊடக கணக்கிலிருந்து உட்பொதிக்கப்பட்டது. லேட்டஸ்ட்லி பணியாளர்கள் இந்த தகவலை திருத்தவில்லை அல்லது மாற்றவில்லை. சமூக ஊடக இடுகைகளில் தோன்றும் கருத்துக்கள் மற்றும் உண்மைகள் லேட்டஸ்ட்லி கருத்துகளைப் பிரதிபலிக்காது, மேலும், லேட்டஸ்ட்லி அதற்கான எந்தப் பொறுப்பையும் ஏற்காது.)