![](https://objectstorage.ap-mumbai-1.oraclecloud.com/p/H7eKs7B2tVOw_abojbrxoIB_6t5W29G2St7cuQZAAZxzK6otiY2itlU_lhorOfFB/n/bmd8qrbo34g7/b/uploads-DataTransfer/o/cmstamil.letsly.in/wp-content/uploads/2023/02/Sylendra-Babu-IPS-Tamilnadu-DGP-380x214.jpg)
பிப்ரவரி 03, சென்னை: தமிழ்நாடு காவல்துறை இயக்குனர் (Directorate General of Police ) சைலேந்திர பாபு (C. Sylendra Babu IPS) ஐ.பி.எஸ் வெளியிட்டுள்ள வீடியோவில், "இரிடியம் மோசடி (Iridium Scam) என்ற புதுவித மோசடி நடந்து வருகிறது. இரிடியம் பொருளை வாங்கி விற்பனை செய்யலாம், ரகசியமாக இருக்க வேண்டும், ரூ.5 இலட்சம் முதலீடு செய்தால் ரூ.3 கோடி பணம் கிடைக்கும் என வலைவிரிப்பார்கள்.
நாம் யோசனை செய்து ரூ.1 இலட்சம் முதலீடு செய்யலாம் என்று செல்லும்போது, அதனை வேறொருவர் வாங்கிவிட்டார் என தெரிவித்து நம்மிடம் மொத்தமாக ரூ.5 இலட்சத்தை வாங்க பேசி நடிப்பார்கள். அதனை வாங்கிடவும் செய்வார்கள்.
2 ஆண்டுகள் கழித்து ரூ.3 கோடி மட்டுமல்ல முதலீடு செய்த தொகையையும் கேட்டால், நாங்கள் என்ன செய்வது பெரிய அதிகாரிகள் பிரச்சனை இருக்கிறது. அவர்களை பார்க்க சென்னை (Chennai) அழைத்து செல்வார்கள். Annamalai About DMK: எம்.ஜி.ஆரின் வார்த்தைகளை உறுதியாக்கிய திமுக? – தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை சரமாரி விமர்சனம்.!
அங்கு பல இடங்களுக்கு அழைத்து சென்று அலைக்கழித்து, நீங்கள் சோர்வடைந்ததும் (Getting Tired) காத்திருந்து, மேற்படியான நபர் அமெரிக்கா சென்றுவிட்டார் என உங்களை அம்போவென விட்டு சென்றுவிடுவார்கள்.
இதுகுறித்த வழக்குகள் சேலம், கன்னியாகுமரி, கேரளா உட்பட பல இடங்களில் இருந்தும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இரிடியம் என்று கூறினாலே அது மோசடி (Iridium Scam Awareness). அவை குறித்து யாரும் கூறினாலே காவல் துறையினருக்கு தகவல் தெரிவித்துவிடுங்கள். நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்ததை யாரிடமும் கொடுத்து ஏமார்ந்துவிடாதீர்கள்" என தெரிவித்தார்.