Rain (Photo Credit: Pixabay)

ஜூன் 01, சென்னை (Chennai News): தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளுக்கான தினசரி வானிலை முன்னறிவிப்பை பொறுத்தமட்டில், கடந்த 24 மணி நேரத்தில் வட தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. இதர மாவட்டங்களில் (Weather Update Tamilnadu) ஒரு சில இடங்களில் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் வறண்ட வானிலை நிலவியது. கடந்த 24 மணி நேரத்தை பொறுத்தமட்டில் சேலம் மாவட்டம் ஏற்காடு பகுதியில் 4 சென்டிமீட்டர் மழையும், கிருஷ்ணகிரி மாவட்டம் ராயக்கோட்டை, நாமக்கல் மாவட்டம் ராசிபுரம், தர்மபுரி மாவட்டம் பென்னாகரம், திருச்சி சிறுகமணி பகுதியில் தலா 3 சென்டிமீட்டர் மழையும் பெய்துள்ளது.

மழை பெய்ய வாய்ப்புள்ள மாவட்டங்கள்: அதிகபட்ச வெப்பநிலையாக வேலூரில் 43.7 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. அதேபோல, சென்னையில் 40.2 டிகிரி செல்சியஸ் பதிவாகி இருக்கிறது. நாமக்கல்லில் குறைந்தபட்சமாக 22 டிகிரி செல்சியஸ் பதிவாகியுள்ளது. தென் தமிழகப் பகுதியில் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்க சுழற்சி காரணமாக ஒன்றாம் தேதி தமிழகத்தில் ஒரு சில இடத்திலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் இடி-மின்னலுடன் பலத்த காற்றுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோவை மாவட்டத்தில் மலைப்பகுதிகள், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தர்மபுரி, சேலம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. Mahindra and Mahindra: உள்நாடு & ஏற்றுமதியில் 31% அதிக வாகன விற்பனையில் ஈடுபட்ட மகேந்திரா குழுமம்..! 

சென்னை நகரின் நிலை என்ன? இரண்டாம் தேதியை பொறுத்தவரையில் தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி-காரைக்கால் பகுதிகளில் பலத்த காற்றுடன் லேசான மழை முதல் மிதமான மழை பெய்யும். நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, சேலம், தர்மபுரி, திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, வேலூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. ஒன்றாம் தேதி முதல் ஐந்தாம் தேதி வரையில் தமிழ்நாடு, புதுச்சேரி-காரைக்கால் பகுதியில் 1 டிகிரி முதல் மூன்று டிகிரி வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும். சென்னை நகரை பொறுத்தமட்டில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியசும், குறைந்தபட்சமாக 30 டிகிரி செல்சியசும் வெப்பநிலை பதிவாகும்.

சூறாவளிக் காற்றால் மீனவர்களுக்கு அறிவிப்பு: மீனவர்களுக்கான எச்சரிக்கையை பொறுத்தமட்டில் 1, 2 மற்றும் 3 ஆகிய தேதிகளில் குமரிக்கடல் பகுதி, மன்னார் வளைகுடா, அதனை ஒட்டியுள்ள தென் தமிழக கடலோரப் பகுதியில் சூறாவளி காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசக்கூடும் என்பதால் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்படுகிறது. அதேபோல, வங்க கடலில் இன்று முதல் 3ஆம் தேதி வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதி, தெற்கு வங்கக்கடல் பகுதி, தென்கிழக்கு வங்க கடல், அந்தமான் கடல் பகுதி, மத்திய வங்கக்கடல், வடக்கு ஆந்திரா கடலோர பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 கிலோமீட்டர் வேகம் வரை வீசும் என்பதால், இப்பகுதிக்கு செல்ல வேண்டாம்" என்று எச்சரிக்கப்படுகிறது.