ஜூன் 01, புதுடெல்லி (New Delhi): இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனமாக இருந்து வரும் மகேந்திரா & மகேந்திரா குழுமம், மே மாதத்தில் தனது கார் விற்பனை தொடர்பான அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அதன்படி கடந்த மாதம் மகேந்திரா கார் விற்பனை எண்ணிக்கை 71,682 என்ற அளவில் இருக்கிறது. இதனால் ஏற்றுமதி வளர்ச்சி 17% உயர்ந்து இருக்கிறது. BJP TMC Clash in WB: பாஜக - திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் மோதல்; செய்தியாளரின் மண்டை உடைப்பு.!
நல்ல வரவேற்பு: எஸ்யுவி வாகனங்களில் உள்நாட்டு சந்தையில் 43,218ம், ஒட்டுமொத்தமாக 44,283 வாகனத்தையும் விற்பனை செய்து இருக்கிறது. உள்நாட்டு வர்த்தக வாகனங்கள் விற்பனை என்பது 19,826 அளவில் இருக்கிறது. இதனால் வளர்ச்சி விகிதம் என்பது 31% என்ற அளவில் இருக்கிறது.
மே மாதம் மொத்தமாக 43,218 எஸ்யுவிக்களை விற்பனை செய்துள்ள மகேந்திரா, மொத்தமாக 71,682 வாகனங்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. இது கடந்த ஆண்டை விட 17% அதிகம் ஆகும். மே 15ல் எஸ்யுவி எக்ஸ்யுவி 3 எக்ஸ்ஓ முன்பதிவு தொடங்கி வைக்கப்பட்டது. அதற்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும், சிலமணிநேர முன்பதிவுக்குள் 50000 வரவேற்பையும் பெற்று சாதனை படைத்தது. மே 26ம் தேதி முதல் அதன் விநியோகமும் தொடங்கி இருக்கிறது.