TN School Students (Photo Credit: @Anbil_Mahesh X)

மே 30, சென்னை (Chennai News): தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியும் உருவாகியுள்ளது. இதனால் வானிலை ஆய்வு மையமும் ரெட் அலர்ட், ஆரங்சு அலர்ட் எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த நிலையில் பள்ளி திறப்பு தள்ளி செல்கிறது என்பதை போல வதந்திகள் இணையத்தில் பரவின. தற்போது இந்த வதந்திகளுக்கு தமிழக அரசு முற்றுப்புள்ளி வைத்துள்ளது. வானிலை: அடுத்த 3 மணிநேரத்திற்கு இடி, மின்னலுடன் மழை.. 17 மாவட்டங்களின் லிஸ்ட் இதோ.! 

வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த தமிழக அரசு :

தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கும் தேதியில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஜூன் மாதம் 2 -ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளிக்கல்வி இயக்குனர் அறிவித்துள்ளார். தமிழ்நாட்டில் பள்ளிகள் திறப்பானது ஜூன் 9ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக வதந்திகள் பரவி வந்ததால் முன்னதாக குறிப்பிட்ட தேதியிலே பள்ளி திறப்பு நடைபெறும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழக உண்மை சரிபார்ப்பகத்தின் பதில் :