டிசம்பர் 29, குற்றாலம்: அருவியில் குளித்துக்கொண்டு இருந்த சிறுமி திடீரென நீரில் (Child Washed Water Falls Saved By Youngster) அடித்து செல்லப்பட்டு மீட்கப்பட்டார். இதனால் பெற்றோர்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகி அமைதியடைந்தனர்.
தென்காசி மாவட்டத்தில் உள்ள மேற்குத்தொடர்ச்சி மலை பகுதியில் குற்றாலம் மெயின் அருவி (Courtralam Falls, Tenkasi), ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி போன்றவை உள்ளன. இவற்றில் சீசன் நேரங்கள் மற்றும் வார இறுதியான சனி & ஞாயிற்றுக்கிழமைகளில் சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் வைத்து குளித்து செல்வது வாடிக்கையான விஷயமாகும். Doc1Max Syrup: மரியோன் பயோடெக் நிறுவனம் தயாரித்த மருந்தில் நச்சுப்பொருள்.. உஸ்பெகிஸ்தானில் 18 குழந்தைகள் சாவு.. பெற்றோர்கள் கவலை.!
இந்நிலையில், கேரளா மாநிலத்தில் உள்ள பாலக்காடு பகுதியை சேர்ந்தவர் நவநீதன். இவர் தனது குடும்பத்தினருடன் குளிக்க பழைய குற்றால அருவிக்கு வந்துள்ளார். இவர்கள் குடும்பத்துடன் அருவியில் குளித்துக்கொண்டு இருந்தபோது, அவரின் 4 வயது பெண் குழந்தை திடீரென நீரில் அடித்து செல்லப்பட்டுள்ளது.
பழைய குற்றாலம் ல இது மாறி நானும் விழுந்திருக்கேன் ? pic.twitter.com/dfL00MvDKy
— Nila (@aNila60527737) December 29, 2022
இதனால் குழந்தை பயத்தில் அலறிக்கொண்டு இருக்கவே, குடும்பத்தினர் பதறிப்போயினர். இதனால் அங்கிருந்த இளைஞர் சுதாரிப்புடன் செயல்பட்டு சிறுமியை பத்திரமாக மீட்டார். அக்குழந்தை சிறு காயத்தோடு உயிர்பிழைத்துக்கொண்ட நிலையில், சிகிச்சைக்காக தென்காசி தனியார் மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்டுள்ளது.