Piranoor Border Famous Rahmath Parotta Stall, , Courtralam | File Photo (Photo Credit: Google Maps)

பிப்ரவரி 10, குற்றாலம்: தமிழகத்தில் உள்ள பிரதான சுற்றுலாத்தலங்களில் ஒன்றாக தென்காசி (Tenkasi District) மாவட்டத்தில் உள்ள குற்றாலம் (Courtallam) இருந்து வருகிறது. இங்கு மெயின் அருவி (Main Falls), ஐந்தருவி (Five Falls), பழையருவி (Palaya Kutrallam) என பல அருவிகள் நிறைந்து காணப்படுகின்றன.

அதேபோல, தென்காசி மாவட்டம் மேற்குத்தொடர்ச்சி (WestrenGads) மலையை ஒட்டி அமைந்துள்ள காரணத்தால், அங்கு எப்போதும் பொதிகை (Pothigai) சாரல் மக்களை மகிழ்விக்கும். சுற்றுலாத்தலங்கள் (Tourist Places) என்று கூறினாலே, அதனை வைத்து பிரபலமாகும் கடைகள் (Stall) இருக்கத்தான் செய்யும்.

குற்றாலம் மெயின் அருவிகளுக்கு செல்லும் வழியில் விற்பனை செய்யப்படும் ஏத்தங்காய், நேந்திரம் சிப்ஸ் (Yethangai, Nendran Chips) இந்திய அளவில் பிரபலமாக விரும்பப்படும் நொறுக்குத்தீனி ஆகும். அதேபோல, குற்றாலத்தில் இருந்து சில கிலோ மீட்டர்கள் தொலைவில் தான் கேரளா பார்டரும் (Kerala State Border) உள்ளது. Ram Charan Golden Heart: கேன்சரால் பாதிக்கப்பட்ட சிறுவனை நேரில் சந்தித்து மகிழ்வித்த நடிகர் ராம் சரண்.! 

பார்டருக்கு செல்லும் வழியில் உள்ள குற்றாலம் பகுதியில் பல பரோட்டா (Parotta Stall) கடை அமைந்துள்ளது. அதில், குற்றாலம் பார்டர் ஹோட்டல் (Border Rahmath Parota Stall) என்ற பெயர் உள்ள, பேச்சுவழக்கில் பார்டர் பரோட்டா கடை என்று அழைக்கப்படும் கடை பிரபலமான உணவகம் ஆகும். அங்கு விற்பனை செய்யப்படும் சுவை மிகுந்த பரோட்டா, அதனுடன் சேர்ந்து வழங்கப்படும் குழம்புக்காகவே அவை பிரபலமானது.

இந்த நிலையில், குற்றாலம் பார்டர் பரோட்டா (Kutrallam Border Parotta Stall) கடையில் கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பார்டர் பரோட்டா கடையில் தரமில்லாத உணவுகள் மக்களுக்கு சமைத்து விநியோகம் செய்யப்படுவதாக சமீபத்தில் தொடர் புகார் எழுந்துள்ளது.

இதனையடுத்து, உணவு பாதுகாப்புத்துறை (Food Safety Officers) அதிகாரிகள் பரோட்டா கடைக்கு நேற்று திடீர் சோதனை செய்ய புறப்பட்டு சென்றனர். ஆனால், பரோட்டா கடை பூட்டப்பட்டு இருந்துள்ளது. இதனால் பரோட்டாவுக்கு குழம்பு தயார் செய்யும் இடத்திற்கு சென்றுள்ளனர்.

அங்கு நடைபெற்ற சோதனையில் அதிகாரிகளுக்கு பேரதிர்ச்சி சம்பவம் காத்திருந்தது. அதாவது, பயன்படுத்த இயலாத சூழல் இருந்த 4 மூட்டை மிளகாய் வற்றல், 200 கிலோ கெட்டுப்போன இறைச்சிகள் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. Edappadi Palanisamy Speech: அமைச்சர் செந்தில் பாலாஜியை வம்புக்கு இழுத்த எடப்பாடி பழனிச்சாமி.. ஊழலின் ஊற்றுக்கண் திமுக என காட்டமான விமர்சனம்..!

இந்த தகவலானது குற்றாலத்திற்கு செல்லும் சுற்றுலாப்பயணிகள், உள்ளூரில் பரோட்டா கடைக்கு சென்று வாங்கி சாப்பிடும் உணவு பிரியர்கள் போன்றறை பெரும் அதிர்வலைக்கு உள்ளாக்கியுள்ளது.

கடையின் உரிமையாளர் அதிகாரிகளிடம் கூறுகையில், "கடை நேற்று அடைக்கப்பட்டு இருந்ததால், வாங்கிய இறைச்சிகள் மீந்துவிட்டன" என தெரிவித்தார். ஆனால், இறைச்சியை பாதுகாக்க -17 டிகிரி செல்ஸியஸ் குளிர்நிலை இருக்க வேண்டும் என்ற நிலையில், அவை கூட இல்லை என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 10, 2023 08:59 PM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).