பிப்ரவரி 17, கும்பகோணம்: தஞ்சாவூர் (Thanjavur) மாவட்டத்தில் உள்ள கும்பகோணம் (Kumbakonam), அன்னை அஞ்சுகம் நகரில் ஆன்லைன் பாலியல் (Online Prostitution) தொழில் நடைபெற்று வந்துள்ளது. இந்த விஷயம் தொடர்பான தகவல் கும்பகோணம் மேற்கு (Kumbakonam West Police Station) காவல் நிலைய அதிகாரிகளுக்கு ரகசியமாக தெரியவந்துள்ளது.

இதனையடுத்து, நேற்று இரவில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பி. மகேஷ் குமார் தலைமையில், நகர மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் பேபி, உதவி ஆய்வாளர் கீர்த்திவாசன் மற்றும் காவலர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து அதிரடி ஆய்வை மேற்கொண்டனர்.

அப்போது, அங்குள்ள வீட்டில் ஆன்லைன் பாலியல் தொழில் நடைபெறுவது உறுதியானது. வீட்டிற்குள் அதிகாரிகள் சோதனை செய்தபோது, 2 பெண்கள் அடைத்து வைக்கப்பட்டு பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்பட்டது உறுதியானது.

2 பெண்களை மீட்ட அதிகாரிகள், அங்கிருந்தவரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்த ரூ.10 ஆயிரம் ரொக்கம், 3 இருசக்கர வாகனங்கள், 6 செல்போன்கள் போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டன. Viluppuram Anbu Jothi Ashram: விழுப்புரம் அன்பு ஜோதி ஆசிரமத்தில் பெண்கள் பலாத்காரம், ஆதரவற்றோர் துன்புறுத்தல்., சிலர் மாயம்.. விசாரணையில் பதறவைக்கும் திருப்பங்கள்..!

கைதான நபர்களிடம் நடந்த விசாரணையில், சோழம்புரம் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரன் (வயது 39), பைராகித் தோப்பு பகுதியை சேர்ந்த ரம்யா (வயது 26), முருக்கன்குடி பகுதியை சேர்ந்த பிரேமி (வயது 25) ஆகியோர் விபச்சார தொழிலை நடத்தியது அம்பலமானது.

இவர்கள் வாடகைக்கு வீடு எடுத்து குடும்பத்தினர் போல வசித்து விபச்சார தொழிலை நடத்தியுள்ளனர். ஆன்லைனில் பாலியல் தொழில் செய்யும் இந்த கும்பல் ஏழ்மையில் உள்ள பெண்கள், ஆடம்பரத்திற்கு ஆசைப்படும் பெண்கள், வேலைக்கு செல்லும் பெண்களை குறிவைத்து மூளைச்சலவை செய்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியுள்ளது.

கைதான 3 பேரின் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், பரமேஸ்வரனை கும்பகோணம் (Kumbakonam Prison) கிளை சிறையில் அடைத்தனர். பிற 2 பேரையும் திருவாரூர் (Thiruvarur Prison) சிறையில் அடைத்தனர். சிதம்பரத்தை சேர்ந்த 2 பெண்கள் மீட்கப்பட்டு தஞ்சாவூரில் (Thanjavur Shelter) இருக்கும் பெண்கள் காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டனர்.

(மேற்கூறிய செய்தி முதலில் லேட்டஸ்ட்-லி பதிப்பகத்தால் பிப்ரவரி 17, 2023 09:20 AM அன்று வெளியிடப்பட்டுள்ளது. மேலும் பல அரசியல், உலகம், விளையாட்டு, பொழுதுபோக்கு செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்வதற்கு எங்களுடன் தொடர்பில் இருங்கள்).