College Student Dies (Photo Credit : ThanthiTV X)

மே 12, சென்னை (Chennai News): சென்னை பரங்கிமலை ரயில் நிலையம் அருகேயுள்ள தண்டவாளத்தை இறுதியாண்டு படித்து வந்த கல்லூரி மாணவர்கள் இருவர் கடக்க முயன்றுள்ளனர். இவர்கள் செல்போன் பேசியபடி அலட்சியமாக தண்டவாளத்தை கடந்ததாக கூறப்படுகிறது.

ரயில் மோதியதில் உயிரிழப்பு :

இந்நிலையில் எழும்பூரில் இருந்து தாம்பரம் வழியாக சென்ற ரயில் மோதியதில் சம்பவ இடத்திலேயே இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து இருவரின் சடலங்களை மீட்டு பிரேத பரிசோதனைக்கு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், விசாரணை நடத்தினர். Chennai Shocker: 13 வயது சிறுமியை சீரழித்த 12 பேர் கும்பல்.. நெஞ்சை பதறவைக்கும் கொடூரம்.! 

காவல்துறையினர் விசாரணை :

காவல்துறையினரின் விசாரணையில் உயிரிழந்தவர்கள் பெரம்பலூர் முகமது பட்டினம் பகுதியைச் சேர்ந்த சபீர் அகமது (வயது 20) மற்றும் முகமது நபி (வயது 20) என தெரியவந்துள்ளது. மேலும் அவர்கள் செல்போன் பேசியபடி சென்றதே உயிர் இழப்புக்கு காரணம் என்றும் தெரியவந்துள்ளது.