Marriage (Photo Credit: Pixabay)

மே 27, மதுரை (Madurai News): மதுரை மாவட்டத்தில் உள்ள சோழவந்தான் அடுத்துள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த ஓட்டுநர் ஒருவருக்கு திருமணமாகி, குழந்தை இல்லாத காரணத்தினால், தனது முதல் மனைவியை விவாகரத்து செய்துள்ளார். இதனையடுத்து, பெண் புரோக்கர் மூலம் 2-வது திருமணத்திற்கு ஏற்பாடு செய்து, திருமணம் நடந்து முடிந்தது. Israeli Strikes in Rafah: கட்டிடங்களை குறிவைத்து தாக்கிய இஸ்ரேல் இராணுவம், டென்ட்டில் குடியிருந்த 35 பேர் பரிதாப பலி.!

இந்நிலையில், திருமணத்திற்கு மறுநாள் கணவன்-மனைவி இருவரும் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சென்றுள்ளனர். அப்போது, இவருக்கு செல்போனில் அழைப்பு வந்ததால், சற்று தள்ளி நின்று போனில் பேசிக் கொண்டிருந்துள்ளார். பின்னர், வந்து பார்த்த போது அவரது மனைவியை காணவில்லை. அங்கிருந்தவர்களிடன் கேட்டு, சுற்றித் தேடியும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.

இதனையடுத்து, தனக்கு 2-வது திருமணம் செய்து வைத்த அந்த புரோக்கருக்கு செல்போன் மூலம் அழைப்பு விடுத்தார். ஆனால், அவரது செல்போன் ஸ்விட்ச் ஆஃப் செய்யப்பட்டிருந்தது. அவர், தனது 2-வது மனைவிக்கு அவரது சொந்த செலவில் நகை (Jewelry) வாங்கி கொடுத்துள்ளார். மேலும், அவரிடம் பணத்தையும் கொடுத்து இருந்தார். அப்போதுதான், அந்த பெண் புரோக்கரும் இந்த பெண்ணும் தன்னை ஏமாற்றியுள்ளது தெரியவந்தது. இதனால், விரக்தியில் இருந்த அவர், இதுவரை காவல்நிலையத்தில் புகார் எதுவும் கொடுக்கவில்லை.