
பிப்ரவரி 11, சென்னை (Chennai News): தைப்பூசம் 2025 பண்டிகையை முன்னிட்டு, இன்று தமிழ்நாட்டில் அரசு பொதுவிடுமுறை அமலில் இருக்கிறது. ஆனால், இன்றைய நல்ல நாளில் சொத்துக்களை வாங்கினால், பதிவு செய்தால் மேற்படி சொத்துக்கள் கிடைக்கும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக இருக்கிறது. இதனால் இதுபோன்ற சுபமுகூர்த்தம் நிறைந்த நல்ல நல்ல நாளில், பயனாளிகளின் வேண்டுகோளுக்கு இணங்க தமிழ்நாடு பத்திரப்பதிவுத்துறை தனது அலுவலர்களை பணியில் இருக்கவைத்தது, அதன் வாயிலாக அரசின் வருமானத்தையும் உறுதி செய்கிறது.
பத்திரப்பதிவுதை அறிவிப்பு:
இந்நிலையில், இன்று அரசுப் பொதுவிடுமுறையாக இருந்தாலும், மக்களின் பத்திரப்பதிவுகளை கருத்தில்கொண்டு, பத்திரப்பதிவு அலுவலகங்கள் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இன்று காலை சுமார் 10 மணிமுதல் பத்திரப்பதிவுத்துறை அலுவலகங்கள் திறக்கப்படும் என பத்திரப்பதிவுத்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், "பொதுமக்களின் நலன் கருதி அசையா சொத்து குறித்த ஆவணப்பதிவுகளை மங்களகரமான நாட்களில் மேற்கொள்ள பொது மக்கள் விரும்புவதால் பொது விடுமுறை நாளான 11.02.2025 செவ்வாய் கிழமை இன்று தைப்பூசம் நாளில் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள அரசால் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. Chennai Shocker: வேலைக்கு ஏன் வரவில்லை? கேள்வி கேட்ட மேனேஜர் அடித்துக்கொலை.. ஐவர் கும்பல் அதிர்ச்சி செயல்.!
விடுமுறை நாளுக்கான பதிவுக்கட்டணம் வசூல்:
எனவே முந்தைய ஆண்டுகளை போலவே இவ்வாண்டும் ஆவணப்பதிவுகள் மேற்கொள்ள பதிவு அலுவலகங்களை காலை 10.00 மணி முதல் ஆவணப்பதிவு முடியும்வரை செயல்பாட்டில் வைத்திட அனைத்து பதிவு அலுவலகங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்குறிப்பிடும் விடுமுறை நாளில் மேற்கொள்ளப்படும் ஆவணப் பதிவுகளுக்கு விடுமுறை நாள் ஆவணப் பதிவிற்கான கட்டணம் சேர்த்து வசூலிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
11 பிப்ரவரி 2025 நல்ல நேரம் இன்று (11 February 2025 Today Good Time):
இன்று நல்லநேரம் காலை 07:30 முதல் 08:30 வரையிலும், மாலை 04:30 முதல் 05:30 வரையிலும் இருக்கிறது. கௌரி நல்ல நேரம் காலை 10:30 மணிமுதல் 11:30 மணிவரையிலும், மாலை 07:30 மணிமுதல் 08:30 மணிவரையிலும் இருக்கிறது. எமகண்டம் காலை 09:00 மணிமுதல் 10:30 வரை இருக்கிறது. ஆகையால், பத்திரப்பதிவு செய்வோர் எமகண்டத்தை விட்டுவிட்டு, இன்றைய நாளின் பிற நேரங்களில் எப்போதும் மேற்கொள்ளலாம் என ஆன்மீக வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.