Manali Parking Yard Manager Murder Case Accuse Visuals (Photo Credit: @Sriramrpckanna1 X)

பிப்ரவரி 10, மணலி (Chennai News): ஆந்திரப்பிரதேசம் மாநிலத்தில் உள்ள குடூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர் சாய் பிரசாத் (வயது 45). இவர் கடந்த 5 வருடமாக சென்னை மணலி, புதுநகர், விச்சூர், வெள்ளி வாயல் கண்டைனர் வாகனங்கள் நிறுத்துமிடத்தில் மேலாளராக வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் சாய் பிரசாத், தான் தங்கியிருந்த அறையில் சுத்தியால் அடித்துக் கொலை செய்யப்பட்டவாறு சடலமாக கிடந்துள்ளார். இந்த விஷயம் குறித்து தகவல் அறிந்த மணலி காவல்துறையினர், சாய் பிரசாத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். திமுக நிர்வாகி மனைவி கொலை விவகாரத்தில் நெஞ்சை நடுங்கவைக்கும் பின்னணி.. பாலியல் தொல்லை, வாய் பேச்சால் பறிபோன உயிர்.! 

மேலாளர் கண்டிப்பு:

பின் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அதிகாரிகள் விசாரணையை முன்னெடுத்தனர். விசாரணையில், அந்நிறுவனத்தில் வேலை பார்த்த தண்டையார்பேட்டை பகுதியில் வசித்து வரும் டெல்லி பாலாஜி என்பவர், கடந்த பிப்.06ம் தேதி அன்று, பணிநேரம் முடியும் நேரத்திற்கு முன்னதாகவே வீட்டிற்கு சென்றுவிட்டார். இந்த விஷயத்தை அறிந்த சாய், பாலாஜியை கண்டித்து இருக்கிறார். மேலும், இதுதொடர்பாக உண்டாகிய வாக்குவாதத்தில், பாலாஜியை நாளையில் இருந்து வேலைக்கு வரவேண்டாம் எனவும் மேலாளர் கண்டித்து இருக்கிறார். வானிலை: அடுத்த ஒரு வாரத்திற்கு வறண்ட வானிலை - சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.! 

நண்பர்களுடன் கூட்டு சேர்ந்து கொடூரம்:

இதனால் பாலாஜிக்கு ஆத்திரம் உண்டாகவே, அவர் தனது நண்பர்களிடம் கூறி ஆதங்கப்பட்டுள்ளார். பின் அனைவருமாக சேர்ந்து சாய் பிரசாத்தின் அறைக்கு சென்று, சுத்தியால் அவரை அடித்து கொலை செய்துள்ளனர். கொலைக்கு பின் அனைவரும் தலைமறைவான நிலையில், காவல்துறையினர் உண்மையை கண்டறிந்து அனைவரையும் கைது செய்தனர். இந்த வழக்கில் பாலாஜி, அவரின் நண்பர்கள் முகிலன், பார்த்த சாரதி, ஷியாம், மணிமாறன் ஆகிய 5 நபர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர். வேலைக்கு வராததை கண்டித்த காரணத்தால் மேலாளர் அடித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் கடும் அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது.