Chennai MTC Bus Reels Case (Photo Credit: @PTTVOnlineNews X)

ஜனவரி 04, வடபழனி (Chennai News): சென்னையில் உள்ள மாநகர பகுதிகளை, மாநகர போக்குவரத்து கழகம், தனது சேவை வாயிலாக இணைந்து வருகிறது. தினமும் பல இலட்சம் மக்கள் பயணம் செய்யும் மாநகர பேருந்துகளை இயக்க நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றனர். இதனிடையே, சமீபத்தில் வடபழனி பேருந்து ஒன்றில், பேருந்தின் தற்காலிக பணியாளர்களான நடத்துனர் மற்றும் ஓட்டுநர், பணியின்போது ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டனர். TN Climate Summit 3.0: பள்ளிகளில் காலநிலை கல்வி சூழல் மன்றங்கள் - தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு.! 

இருவரும் பணிநீக்கம்:

இந்த வீடியோ வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகவே, விதியை மீறி செயல்பட்ட இருவரின் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதனையடுத்து, வீடியோவின் பேரில் துறை ரீதியிலான விசாரணை முன்னெடுத்த மாநகர போக்குவரத்து கழக அதிகாரிகள், தற்காலிக பணியாளர்களாக ஓட்டுநர், நடத்துனர் இருவரையும் பணியில் இருந்து உடனடியாக விடுவித்து உத்தரவிட்டனர். பணியின்போது அலட்சியமாக இருந்ததாகவும், ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்டதாகவும், சென்னை மாநகர பேருந்தின் ஓட்டுநர், நடத்துனர் பணிநீக்கம் செய்யப்பட்டனர். ரீல்ஸ் வீடியோ மோகம் காரணமாக பலரின் உயிர், உடல் உறுப்புக்கள் பறிபோன நிலையில், அவ்வாறான சோகம் நடப்பதற்குள் மாநகர பேருந்து நிர்வாகம் நடவடிக்கை எடுத்து இருக்கிறது.

பணியின்போது ரீல்ஸ் வீடியோ எடுத்து வெளியிட்ட ஓட்டுநர் & நடத்துனர்: